Cyclone Mandous Live Updates: கரையை கடக்க தொடங்கிய மாண்டஸ் புயல்

Fri, 09 Dec 2022-9:58 pm,

Cyclone Mandous Live Update: மாண்டஸ் புயலின் வெளிப்புற பகுதி கரையை கடக்க தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Cyclone Mandous Live Updates: மாண்டஸ் புயல் காரைக்கால் அருகே வலுவிழந்தது. புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்துவரும் மாண்டஸ் புயல், இன்று நள்ளிரவு - நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்தம் 13 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


நாளை மாண்டஸ் புயல் கரையை கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிக கன மழை பெய்யும் என்பதால் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. 


மாண்டஸ் புயலால் ஏற்படும் பாதிப்புகள் அல்லது வெள்ளம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு அழைக்க உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Latest Updates

  • கரையை நெருங்கும் மாண்டஸ் புயலின் கண் பகுதி 

    மாண்டஸ் புயலின் வெளிவட்ட பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயலின் மைய பகுதி இன்னும் கடலில் இருக்கிறது. புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகும். இப்போது 14 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. கண் பகுதி கரையை கடக்கும்போது காற்றின் வேகம் அதிகபட்சம் 100 கி.மீ வேகத்தில் இருக்கும் என தகவல்

  • கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ்

    வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையைக் கடக்க தொடங்கியது 

  • சென்னையை நெருங்கியது மாண்டஸ் புயல்

    வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு மிக அருகாமையில் வந்துள்ளது. தற்போது 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • ECR-ல் போக்குவரத்திற்கு தடை

    மாண்டஸ் புயல் காரணமாக இரவு 10 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அவசர தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு 

  • மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தேவையற்று வெளியே வர வேண்டாம்: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர்
    சென்னை 170 கிலோமீட்டர் தொலைவிலும்  மாமல்லபுரத்துக்கு 135 கிலோ மீட்டர்  தொலைவிலும்  மாண்டஸ் புயல்   மையம் கொண்டிருப்பதாகவும்  புயலின் வேகம் 3 மணி நேரத்தில்   14 கிலோமீட்டர் வேகத்தில்  புயல் நகர்வதாகவும் , 121 வருடத்தில் இது 13-வது புயல் எனவும், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரம் கடலிலிருந்து கரையை கடக்கும் எனவும்  70 லிருந்து 80 கிலோ மீட்டர்  வேகத்திற்கு காற்று வீசுவதாகவும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தேவையற்று வெளியே வர வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

     

  • கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ்

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வெளிப்புற பகுதி கரையைக் கடக்க தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகே 110 கி.மீ தொலைவில் புயலின் மையப் பகுதி நிலை கொண்டிருப்பதாகவும் தகவல். புயல் கரையைக் கடக்க தொடங்கியிருப்பதால் காற்றின் வேகம் சென்னை மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்துள்ளது.

  • தேதி குறிப்பிடாமல் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது -தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (Forest Apprentice) (தொகுதி VI) பதவி நியமனத்திற்காக நாளை (10.12.2022) நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

  • மாண்டஸ் புயலிலும் மகத்தான மக்கள் பணி செய்யும் மாநகராட்சி ஊழியர்கள்!

     

  • சென்னையிலிருந்து 150 கிமீ தொலைவில் மாண்டாஸ் புயல்:
    Cyclone Mandous Live Updates: சென்னையிலிருந்து 150 கிமீ தொலைவில் மாண்டாஸ் புயல் உள்ளது, புயல் கரையை கடக்கும் முன் அடுத்த சில மணி நேரங்களில் சென்னையில் மிக கனமழை பெய்யும்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • நீலகிரி மாவட்டத்தில் மோசமான வானிலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
    மாண்டாஸ் புயல் காரணமாக நாளை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் அறிவிப்பு. மோசமான வானிலை காரணமாக விடுமுறை அளித்து உத்தரவு.

  • தொடர் மழையால் சாலையில் ஏற்பட்ட  பள்ளம் - உடனே சரி செய்த நெடுஞ்சாலை துறையினர்
    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் எதிரே திருவள்ளூர் சாலையில் தொடர் கனமழையால் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் திருவள்ளூர் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பயத்தோடு இந்த சாலையை கடந்து சென்றனர். இதனால் இச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை ஜல்லிக்கற்கள் மற்றும் எம் சேண்டால் நிரப்பி ஜேசிபி உதவியுடன் பள்ளத்தை சரி செய்தனர். மேலும் நெடுஞ்சாலை துறையினரின் இந்த துரித நடவடிக்கையால்  பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு:
    சென்னை, சேப்பாக்கம், எழிலகம், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (09.12.2022) வெள்ளிக்கிழமை மாலை 06.45 மணியளவல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி - கல்லூரிகளுக்கு  விடுமுறை: 
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை (10.12.2022) பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷரவன் குமார் அறிவித்துள்ளார். 

  • புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தயார் -தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
    திருவாரூர் மாவட்டத்தில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். பொதுமக்கள் புகார் அளிக்கும் வண்ணம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு தொடர்பு எண்கள் (1077) அறிவிக்கப்பட்டு புயல் மற்றும் கனமழை தொடர்பான பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. துணை ஆட்சியர் அளவிலான அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 10 ஒன்றியங்களிலும் கண்காணிப்பு பணிவுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்திற்கு புயல் வருவதற்கு  வாய்ப்பு இல்லை இருந்த பொழுதிலும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்கள் தங்க வைப்பதற்கு தேவையான நிவாரண முகமது தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கண் விழித்திரை மூலமாக பொருட்கள் தொடங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது விரைவாக தமிழக முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வரும்.பொங்கல் பரிசு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.தமிழக முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் அரிசி கோதுமை ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளது என செய்தியாளர்களை சந்தித்த  போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

  • அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக இந்த பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு:
    அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அமைந்தக்கரை, அயனாவரம், செங்கல்பட்டு, குன்றத்தூர், பெரம்பூர், பொன்னேரி, புரசைவாக்கம், திருவள்ளூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ஊத்துக்கோட்டை, வண்டலூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.

     

  • பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

    நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக மற்றும் சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

  • வானிலை அறிவிப்பு 

  • சூறாவளி புயல் “மாண்டூஸ்” 

    சூறாவளி புயல் “மாண்டூஸ்” கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 14 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று டிசம்பர் 09, 2022 IST 1430 மணி நேரத்தில் மாமல்லபுரத்தில் இருந்து தென்கிழக்கே 135 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 170 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

  • மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் உதகையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள். கடும் பனிமூட்த்துடன் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பலேவேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டத்துடன் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் உதகையில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.  காணபடுகிறது.

    பனி மூட்டத்தால் மலை பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்கு ஒளிரவிட்டவாறு இயக்கபட்டு வருகின்றன. இதனிடையே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணபடுகின்றன.

  • வானிலை அறிவிப்பு

    வானிலை அறிவிப்பு: அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம்,  ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

  • மாண்டஸ் புயல் எதிரொலியாக பெய்து வரும் மழை மற்றும் புயல்  காற்றினால் காரணமாக சென்னை பட்டினபாக்கம் கடற்கரையில் உள்ள சாலை முழுவதும் கடல் மண் சூழுந்துள்ளது. 

  • வானிலை அறிவிப்பு

    வானிலை அறிவிப்பு: அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மதுரவாயல், பூவிருந்தவல்லி, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

  • வானிலை அறிவிப்பு: அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்,ஊத்துக்கோட்டை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

  • வானிலை அறிவிப்பு: அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக காஞ்சிபுரம், பொன்னேரி, திருவொற்றியூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

  • செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    மாண்டஸ் புயல் எதிரொலியாக பெய்து வரும் மழை மற்றும் புயல்  காற்றினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. 

  • வானிலை அறிவிப்பு: அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

    வானிலை அறிவிப்பு: அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அமைந்தக்கரை, அயனாவரம், செங்கல்பட்டு, குன்றத்தூர், பெரம்பூர், புரசைவாக்கம், திருக்கழுகுன்றம், தண்டையார்பேட்டை, உத்திரமேரூர், வண்டலூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அமைந்தக்கரை, அயனாவரம், செங்கல்பட்டு, குன்றத்தூர், பெரம்பூர், புரசைவாக்கம், திருக்கழுகுன்றம், தண்டையார்பேட்டை, உத்திரமேரூர், வண்டலூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

  • மாண்டஸ் புயல் காற்றினால் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுகார வீதியில் பெரிய வேப்ப மரம் சாய்ந்து கீழே விழுந்து விபத்து.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மாண்டஸ் புயல் எதிரொலியாக பெய்து வரும் மழை மற்றும் புயல்  காற்றினால் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுகார வீதியில் பெரிய வேப்ப மரம் சாய்ந்து கீழே விழுந்து விபத்து. மரம் விழுந்ததில் அருகாமையிலிருந்த மின் சார கம்பிகளும் அறுந்ததால் சுமார் ஒரு மணி நேரமாக மின்சாரம் பாதிப்பு

    தீயணைப்பு வீரர்கள் வேப்ப மரத்தை அப்புறப்படுத்தும் பணியிலும்,மின் சார வாரியத்தினர் மின்சாரத்தை சீர் செய்யும் பணியிலும்  ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

  • மாண்டஸ் புயல் எதிரொலி: நாளையும் விடுமுறை

    மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மாண்டஸ் புயல்: காற்றின் வேகத்தால் கிழிந்த தேசிய கொடி

    மாண்டஸ் புயல் காற்றின் காரணமாக சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தலத்தில் ஏற்றபட்டிருந்த மூவர்ன தேசிய கொடி காற்றின் வேகத்தால் கிழிந்த நிலையில் பறந்து சென்றது. ராணுவத்தினர் உடனடியாக மாற்ற உள்ளதாக தகவல்.

  • சென்னை வாசிகளே உஷார்!

    அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம்,ஆலந்தூர்,மதுரவாயல் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

  • மாண்டஸ் புயல்: மதுராந்தகத்தில் மழை

    அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

  • செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் அச்சம். கடல் சீற்றம் காரணமாக பாதுகாப்பான இடங்களில் தங்களது படகுகளையும் மீன்பிடி வலைகளையும் மீனவர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

  • காரைக்காலில் இருந்து சுமார் 180 கிமீ வடகிழக்கே மாண்டஸ் புயல் வலுவிழந்தது. டிசம்பர் 9 நள்ளிரவு முதல் டிசம்பர் 10 அதிகாலை வரை மாமல்லபுரத்தைச் சுற்றி  புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும்.

  • மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருக்கும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. புயலின் தீவிரம் புதுச்சேரியில் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுச்சேரி தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா ஆகியவை மூடப்பட்டிருக்கின்றன. புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் கடற்கரை உள்ளிட்ட இடங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

  • மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. புயலின் தீவிரம் புதுச்சேரியில் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கிருக்கும் தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா ஆகியவை மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் கடற்கரை உள்ளிட்ட இடங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

  • SCS Mandous SW BoB: காரைக்காலில் இருந்து கிழக்கே 200கிமீ தொலைவில் இன்று 0530 IST மணிக்கு. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் மாண்டோஸ் புயலினால், நள்ளிரவு முதல் நாளை (டிசம்பர் 10ம் தேதி) அதிகாலை வரை, மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இந்தப் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை நாளை அதிகாலைக்குள் கடக்கும்.  

  • மாண்டஸ் புயலினால் பெய்து வரும் கனமழையினால், ஏரிகள் நிரம்பிவருகின்றன. ஏரிகளில் நீர்  இருப்பு நிலவரம் தொடர்பாக வானிலை மையம் தரவுகளை பகிர்ந்துள்ளது.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மாண்டஸ் புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், நாகையில் அவ்வபோது லேசான காற்றுடன் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. 

  • மாண்டஸ் புயல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரியில் கடல் வழக்கத்திற்கு மாறாக சீற்றம்... தரைக்காற்றின் வேகம் 60 கிலோ மீட்டர் வரை வீசுகிறது... மேலும் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது

  • அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக காஞ்சிபுரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

  • மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைகிறது: IMD

  • மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு உதவும் வகையில் சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூரில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • மாண்டஸ் புயல்: EOS-06 மூலம் எடுக்கப்பட்ட மாண்டஸ் சூறாவளி படங்களை இஸ்ரோ பகிர்ந்தது.

  • அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக எம்பூர்,பெரம்பூர், ரசைவாக்கம், திருவொற்றியூர், தொண்டையார்பேட்டை, உத்திரமேரூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

  • சென்னை வாசிகளே உஷார்!!

    அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுரவாயல்,மாம்பலம்,மயிலாப்பூர்,பூவிருந்தவல்லி பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

  • சோழிங்கநல்லூர் பகுதிகளில் மிதமான மழை

    அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக சோழிங்கநல்லூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

  • நாகை  துறைமுகத்தில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் நாகை நாகூர் தேவூர் திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன்கூடிய கனமழை மற்றும் மிதமான இன்று மாலையில் இருந்து பெய்து வருகிறது. புயல் அறிவிப்பு காரணமாக நாகை  துறைமுகங்கத்தில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

  • மாண்டஸ் புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள்: அதிகாரிகளுக்கு பறந்த கட்டளைகள்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அனைத்து அதிகாரிகளும் பணித் தலைமையகத்தில் இருக்க வேண்டும்.

    - குறிப்பிட்ட மாநிலங்களில் இரவு நேர பேருந்து வசதிகள் ரத்து. 

  • நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    நாமக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனும் வானிலை மைய எச்சரிக்கையை அடுத்து, நாளை (09.12.2022) மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

  • மாண்டஸ் புயல் காரணமாக சேலத்தில் நாளை விடுமுறை:
    கனமழை மற்றும் மாண்டஸ் புயல் நள்ளிரவில் கரையை கடக்கும் என்பதால், டிசம்பர் 9 ஆம் தேதி, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு:
    அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

  • மாண்டஸ் சூறாவளி: விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

    சூறாவளி முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, சென்னை சர்வதேச விமான நிலையம், புதுதில்லியில் உள்ள கார்ப்பரேட் தலைமையகம் (CHQ) உட்பட பல்வேறு அமைப்புகளுடன் இதுவரை நான்கு கூட்டங்களைக் கூட்டியுள்ளது. சென்னை விமான நிலையத்தைப் பொறுத்தவரை, AAI, AOC, CISF, GHA ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு பணிக்குழு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, விமானப் பகுதி மற்றும் முனைய கட்டிடத்தை அவ்வப்போது கூட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. 

  • கடல் மற்றும் கடற்கரைகளில் இருந்து விலகி இருங்கள்:

    மாண்டஸ் சூறாவளியை எதிர்கொள்ள ஆணையர் தலைமயில் சூறாவளி ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இதில்  வெள்ளக் கண்காணிப்பு அலுவலர்கள், GCC இன் அனைத்து துணை ஆணையர்கள், HoD-கள் மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர். சென்னைவாசிகள் கடல் மற்றும் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்குமாறு GCC அறிவுறுத்தியுள்ளது. 

  • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை:

     

  • புயல் உதவி வேண்டும்: 
    சென்னைவாசிகளே! வெள்ளம் தொடர்பான ஏதேனும் உதவி வேண்டும் என்றால், 1913 எண்ணுக்கு தொடர்புக்கொள்ளலாம்.

     

  • லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு:
    அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக குன்றத்தூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

     

  • மாண்டஸ் புயல் எப்பொழுது கரையை கடக்கும்: 

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link