Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 26, 2022)
Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 26.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
Latest Updates
இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன்:
ஜூன் முதல் வாரத்தில் திமுக அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம். இந்தியா - பாக்., மேட்ச் போல் கண்டவருக்கெல்லாம் டிக்கெட் தந்து அழைத்து வந்து நேரு அரங்கில் அரசு விழாவை நிகழ்த்திக்காட்டியது திராவிட மாடலின் சாதனை --பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி10 வயது சிறுவனை தூக்கி வீசியா யானை:
பழனி அருகே ஒற்றை காட்டு யானையால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 10 வயது சிறுவனின் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளன மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் சிறுவன் அவதிப்பட்டு வரும் நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.பிரபல யூடியூபர் மது போதையில் தன்னை தாக்கியதாக நடிகை புகார்:
பிரபல யூடியூபர் மது போதையில் தன்னை தாக்கியதாக நடிகை புகார். சக்தி தரப்பிலும் குஷிவர்மா மீது அதே யூடியூப்பில் நடித்த மற்றொரு பெண்ணும் புகார். இருவரையும் காவல் நிலையம் வரவழைத்து விசாரனை. சக்தியை மதுரவாயல் போலீசார் விசாரணைக்கு அழைத்தும் நேரில் ஆஜராகாமல் உள்ளார். நேற்று இரவு சக்தி, குஷி வர்மா உள்ளிட்ட நண்பர்கள் மது போதையில் சண்டையிட்டு கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.சென்னை வந்தார் பிரதமர் மோடி
ஆளுநர் ஆர்.என்.ரவி, டிஜிபி சைலேந்திர பாபு, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி, ஐ.என்.எஸ். அடையாறு விமானப் படை தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். பின்னர், ஐ.என்.எஸ் தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேரு அரங்கத்திற்கு செல்கிறார் மோடி.
பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் வந்தார் எடப்பாடி பழனிச்சாமி
பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, அவரை வரவேற்க, தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையம் வந்தார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம்
கோவை பாரதியார் பல்கலைக்கழக முப்பத்தி ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரவி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற அனைத்து நிருபர்களுக்கு பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்படும் தகவல் அடங்கிய பேக்கில் 500 ரூபாய் நோட்டு வைத்து கொடுக்கப்பட்டது. இதனால் பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. பணமும் திருப்பி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உடனடியாக புதிதாக மக்கள் தொடர்பு அதிகாரியாக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் வருகை: அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு
பிரதமர் பங்கேற்கும் அரங்கத்திற்குள் திமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மாறி மாறி கோசங்கள் எழுப்பி வருவதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சென்னை வருகை:
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு முதலில் செல்கிறார். அதன் பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்திற்கு அவர் செல்வார்.
அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமரை வரவேற்க சென்னை தயாராகிறது
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சென்னை தயாராக உள்ளது. பிரதமர் மாலை 5:45-க்கு நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தருகிறார். நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமரை வரவேற்கும் விதமாக மாநகரின் முக்கிய சாலைகளில் இருபுறமும் பாஜக கொடிகள், பிரதமர் மோடியின் படங்கள் என பல வித அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் நீதி மய்யத்தின் சரத்பாபு பாஜக-வில் இணைந்தார்
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் தலைமை நிலைய மாநில செயலாளர் இ.சரத்பாபு பா.ஜ.க வில் இணைந்தார். முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு கட்சிப் பணிகளில் கமலஹாசனின் ஈடுபாடு குறைந்து விட்டதாக கூறி அவர் அக்கட்சியிலிருந்து விலகினார்.
மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
மேல்சபைக்கான எம்.பி. தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர். எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் திம.க வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் மூவரும் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். மேல்சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது:
கடந்த 40 நாட்களில் பெட்ரோல் விலை 11 ரூபாய் உயர்த்தி 9 ரூபாய் குறைத்துள்ளனர். இது மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய அரசு செய்து வருகின்றனர் என மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு.பாஜகவில் இணையும் சரத்பாபு:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளராக இருந்த இ.சரத்பாபு நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது கிண்டி லீ மெரிடியன் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார்.வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டல்:
ஆண்கள் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு பெண்கள் தனியாக இருக்கும்போது அவர்கள் வீட்டுக்குச் சென்று தண்ணீர் கேட்பது போலவும், வாடகைக்கு வீடு கேட்பது போலவும் நடித்து அவர்களை பலவந்தமாக பலாத்காரம் செய்து வந்தார். சிசிடிவி கேமராவில் பதிவுகளை வைத்து குற்றவாளியை பிடித்த மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.‘வேலியே பயிரை மேய்ந்த கதை’ - பள்ளி மாணவியை கடத்திய வாத்தியார்!
கூட்டு பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டுகள் சிறை தண்டனை
மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி கிருபாகரன் மார்த்தாண்டம் இருவரும் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது எனக்கூறி, ரவிச்சந்திரன் மற்றும் சேகருக்கு தலா 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம்:
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் செயல் அலுவலர் மற்றும் சமையல் செய்யும் பெண் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மேல்:
பத்திரிகை சுதந்திரத்திற்காக அரசே சட்டம் போட்டுவிட்டு, அதனை அரசே சீர்குலைப்பது என்பது வேலியே பயிரை மேய்வது போலாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் இந்த பத்திரிகை விரோத செயலுக்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (முழு விவரம்)அண்ணா பல்கலைகழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.2 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்காட்டில் கோடை விழா
2 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்காட்டில் நேற்று கோடை விழா- மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம்
சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடி இன்று சென்னை வருகை
ரூபாய் 31,400 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி; பிரதமரின் வருகையையெட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு.