TN Budget LIVE: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது: நிதியமைச்சர்

Fri, 13 Aug 2021-12:08 pm,

TN Budget LIVE: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது: நிதியமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இன்று. முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை  (Tamil Nadu Budget) நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiyagarajan) வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் வார்த்தைகளாக ஓடும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறுகிறது.


கொரோனா தொற்று நீடித்து வருவதால், சென்னை கலைவாணர் அரங்கத்தின் 3-வது மாடியில் சட்டசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Latest Updates

  • பட்ஜெட் உரையில்... 

    பெட்ரோல் மீதான வரி விலை ரூ. 3 குறைப்பு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

  • பட்ஜெட் உரையில்... 

    குடும்பத்தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தவறான புரிதல்:  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  • பட்ஜெட் உரையில்... 

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இந்தாண்டு இல்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    கோவில்களை நிர்வகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    நூறு நாள் வேலைத் திட்ட ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    ரூ. 20 கோடி மதிப்பில் 865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    ரூ. 66.70 கோடி மதிப்பீட்டில்  எண்ணும் எழுத்தும் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும்; தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    சுமர்ர் 2,500 மெகாவாட் மின்சாரத்தை சந்தைகளில் இருந்து வாங்கியே தற்போது அரசு சமாளித்து வருகிறது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது;: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 20,000 கோடி கடன் உதவி வழங்க உறுதி செய்யப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 623.59 கோடி ஒதுக்கீடு: - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன

  • பட்ஜெட் உரையில்... 

    மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை குறித்து ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க எங்கள் அரசு உறுதியேற்றுள்ளது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ. 3,954 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்\: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மேற்கொள்ளப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பட்ஜெட் உரையில்... 

    ரூ 1.27 கோடி மதிப்பில் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ. 150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும் இதற்காக ரூ. 433 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • ரூ. 500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

  • குளங்களை தூர்வார ரூ.111.24 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ. 6,607 கோடி நிதி ஒதுக்கீடு : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • மீன்வளத்துறைக்கு ரூ. 1149 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • ஆண்டுதோறும் செம்மொழி கலைஞர் சிறப்பு விருது வழங்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ. 6,607 கோடி நிதி ஒதுக்கீடு.

  • நீதித்துறைக்கு ரூ. 1713 கோடி ஒதுக்கீடு; பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 1,360 கோடி ஒதுக்கீடு, 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ. 80 கோடி, தொல்லியல் துறைக்கு ரூ. 29 கோடி ஒதுக்கீடு.

    காவல்துறைக்கு ரூ. 8,930.29 கோடி; சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ரூ. 4,807 கோடி நிதி ஒதுக்கீடு

  • தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5கோடி நிதி ஒதுக்கப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • பெட்ரோல்,டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது- நிதியமைச்சர்

     

  • GST நிலுவைத்தொகையை பெற நிபுணர் குழு அமைக்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • வேளாண்மைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • குடும்ப அட்டைக்கு ₹4000 வழங்கப்பட்டது; தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: பழனிவேல் தியாகராஜன்

  • முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது: பழனிவேல் தியாகராஜன்

  • கடந்த ஆட்சியின் நிதிநிலை தவறுகளை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது; தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் இந்த பட்ஜெட் உரையில் உள்ளன

  • சட்டப்பேரவையில் இருந்து பட்ஜெட் உரையினை புறக்கணித்து அ.தி.மு.க வினர் வெளிநடப்பு!

  • தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கினார்

  • எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கலைவாணர் அரங்கம் வருகை

  • தமிழக பட்ஜெட் 2021-22: கலைவாணர் அரங்கம் வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

  • தமிழக இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link