Chennai Rains LIVE Updates: சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்

Wed, 16 Oct 2024-8:50 pm,

Tamil Nadu Rains Live Updates: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மழை நிலவரம் குறித்த உடனடி தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

Tamil Nadu Rains Live Updates: வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை காலை சென்னையில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கன மழையின் தீவிரம் படிபடியாக  குறையும் என லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் வானிலை ஆய்வு கணிப்புகள் கூறியுள்ளன. இதனிடையே, மழை காரணமாக சென்னை மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாடு, சென்னையின் மழை குறித்த உடனடி தகவல்களை Zee News Tamil சேனலில் காணுங்கள்  

Latest Updates

  • முன்னேச்சரிக்கை நடவடிக்கை வெற்றி

    மாநகராட்சி எடுத்த முன்னேச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நேற்று 17 முதல் 20 செ மீ வரை மழை பெய்தும் நிலைமை கட்டுக்குள் உள்ளது எனவும் தேங்கிய வெள்ள நீர் பெரும்பாலான இடங்களில் முழுமையாக அகற்றபட்டு உள்ளது - கேஎன் நேரு

  • அமைச்சர் கே என் நேரு விளக்கம்

    சென்னையில் மேற்கொள்ள பட்ட வெள்ளநீர் அகற்றும் பணிகள் குறித்தும் மேற்கொள்ளபட்டுள்ள வடிகால் சீரமைப்பு பணிகள் குறித்தும் ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை செய்து பேசி வருகிறார்.

  • ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் மழை நீர் குளம் போல் சூழத் தொடங்கியது. இதனை அடுத்து ரயில்களுக்கு ஏதும் பாதிப்பு இல்லாதவாறு 3 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட நீர் உறிஞ்சும் மோட்டார்கள் மூலம்  தண்டவாளங்களில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்த பணியில் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்தாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்டவாளங்களில் நீர் வற்றாமல் தேங்கி வண்ணம் இருக்கிறது. இதனால் புறநகர் ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

  • இரண்டு நாட்களாக மார்பளவு தேங்கியிருந்த தண்ணீர்

    சென்னை ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட அன்னைக்கு சத்யா நகரில் மார்பளவு தண்ணீர் சூழ்ந்து இருந்தது.  அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர் தற்போது தீயணைப்பு துறையினர் உதவியுடன் மார்பளவு சூழ்ந்திருந்த மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  • திருப்பதியில் கனமழை - TTD முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

    • COMMERCIAL BREAK
      SCROLL TO CONTINUE READING

      திருப்பதி மலைக்கு செல்லும் நடைபாதை நாளை கன மழை காரணமாக மூடப்படுகிறது. 

    • பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

    • மலை சாலைகளில் நிலச்சரிவுகள் குறித்து சிறப்பு கண்காணிப்பு நடத்த நடவடிக்கைகள்.

    • மின்சாரம் தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..

  • நாளை அதிக மழை வருமா?

    வடகிழக்கு பருவ மழை நேற்று முதல் தொடர்ந்து பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட அதிக மழை பெய்யவில்லை.

  • நீலாங்கரை மக்களுக்கு உதவி!

    நீலாங்கரை பக்கிங்காம் கால்வாய் ஓரமாக வசிக்கக்கூடிய 1500 குடும்பங்களுக்கு சென்னை மாநகராட்சி 15 வது மண்டலக் குழு தலைவர் வி.இ.மதியழகன் ஏற்பாட்டில் பால், பிரட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்

  • வடகிழக்கு பருவமழை தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும். இன்னும் கரையைக் கடக்காததால் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது - வானிலை ஆய்வு மைய மண்டல தலைவர்

  • Chennai Rains LIVE Updates: மீனவர்களுக்கு எச்சரிக்கை

    இன்றும், நாளையும் கர்நாடகா, கேரளா கடற்கரை பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • Chennai Rains LIVE Updates: உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவை

    சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் தண்ணீர் போதுமான அளவு இல்லை என்றாலும், சிலர் பீதியை கிளப்பிடுவதாக நகைச்சுவையாக கூறினார்

  • Chennai Rains LIVE Updates: சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்

    சென்னையில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் கொடுத்துள்ளது

  • Chennai Rains LIVE Updates: முதலமைச்சர் பேட்டி

    அரசு கடந்த மூன்று மாதங்களாக எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக மழை நிவாரண பணிகள் சிறப்பாக இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பேட்டி

  • Chennai Rains LIVE Updates: மாநகராட்சி ஊழியர்களுக்கு பாராட்டு

    கனமழையிலும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக சென்னை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • Chennai Rains LIVE Updates: முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு

    அரசின் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளன. வரும் காலங்களில் நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசின் திட்டங்கள் இருக்கும்

  • சென்னையில் மீண்டும் கனமழை

    சென்னையில் சற்று ஓய்ந்த கனமழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை. கொருக்குப் பேட்டை ரயில் நிலையங்களில் தேங்கியுள்ள நீரை மின்மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

  • சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட்

    வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னைக்கு இன்றும் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Chennai Rain Updates : தக்காளி விலை குறைவு

    சென்னையில் நேற்று கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோவுக்கு 50 ரூபாய் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது

  • Chennai Rains LIVE Updates: சென்னை உணவு வழங்கும் டிரோன்

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்வதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடத்தப்பட்டது.

  • Chennai Rains LIVE Updates: சென்னை மக்களுக்கு உணவு இலவசம் - முதலமைச்சர் அறிவிப்பு

    கனமழை எதிரொலியாக அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • Chennai Rains LIVE Updates: ரயில் நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த அமைச்சர்

    சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தனது சொந்த ஊரான திருப்பூர் செல்வதற்காக ஆவடிக்கு இரவு 10:30 வந்த அமைச்சர் சாமிநாதன், இரவு முழுவதும் ரயில் நிலையத்தில் காத்திருந்து இரண்டு மணிக்கு வந்த ரயிலில் புறப்பட்டு சென்றார்.

  • Chennai Rains LIVE Updates: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    15.10.2024 நேற்று சென்னையில் 30 செ.மீ வரை மழை பெய்துள்ளது. தற்போது இயல்பு நிலைக்கு சென்னை திரும்புகிறது. மாநகராட்சி, குடிநீர் வாரியம், தூய்மை பணியாளர்களான  தொழிலாளர்களின் கடுமையான பணி பாராட்டுதலுக்குரியது. வங்கக்கடலில் 360 கி.மீ தூரத்தில் உள்ள புயலின் மையப் பகுதி தற்போது 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து நாளை புதுச்சேரி - எண்ணூருக்கும் இடையில் சென்னையில் கரையை கடக்கும். மழை தொடர்ந்து நீடிக்கும். ஆனால், அதிகன மழை இருக்காது

  • Chennai Rains LIVE Updates: சென்னை அதிக கனமழை அறிவிப்பு நீங்கியது

    சென்னையில் அதிகன மழை அறிவிப்பு நீங்கியது என்றாலும் நாளை 17.10.2024 அதிகாலை புயல் சென்னையை கடக்கும் என்ற வானிலை அறிவிப்பு வந்துள்ளது.

  • Chennai Rains LIVE Updates: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் விமான பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த விமான நிறுவனங்களின் விமான இயக்கம் குறித்த தகவல்களின் அடிப்படையில் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

  • Chennai Rains LIVE Updates: சென்னை பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு

    கனமழை குறைந்ததையடுத்து இன்று அனைத்து வழித்தடத்திலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

  • Chennai Rains LIVE Updates: சென்னை ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், ஏரிக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு.

  • Chennai Rains LIVE Updates: ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்

    பேசின் பிரிட்ஜ் அருகே தேங்கி இருந்த நீர் வடிந்ததின் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வழக்கம் போல் ரயில்கள் வந்து செல்கிறது.

  • Chennai Rains LIVE Updates: நெடுஞ்சாலையில் மழைநீர்

    சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி. 

  • Chennai Rains LIVE Updates: சென்னை அதிகபட்ச மழை பதிவான இடங்கள்

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கத்திவாக்கம் 248. 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நியூ மணலி டவுன் 245.1 சென்டி மீட்டர் மழை, கொளத்தூர் 223.8 சென்டி மீட்டர் மழை, பெரம்பூர் 224. 4 சென்டி மீட்டர் மழை, ஐயப்பாக்கம் 222.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக ஆலந்தூரில் 58. 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  • Chennai Rains LIVE Updates: சென்னை ரெட் அலெர்ட் விரைவில் நீக்கம்

    வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விரைவில் நீக்கப்பட்ட வாய்ப்பு. மழையின் அளவு குறைய வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்க வாய்ப்பு 

  • Chennai Rains LIVE Updates:  ஆந்திராவில் கரையை கடக்கும்

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் போக்கு மாறி தெற்கு ஆந்திரா ராயலசீமா நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்றுவிட்டது.

  • Chennai Rains LIVE Updates:  சென்னை : மூடப்படுள்ள சுரங்கப்பாதைகள் பட்டியல்

  • Chennai Rains LIVE Updates: சென்னைக்கு இனி கனமழை வாய்ப்பில்லை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்தது  , தாழ்வு நிலையின் வடக்கு பகுதி சென்னை  வடக்கே சென்றதால் சென்னையில் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்பு இன்று சென்னைக்கு அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பில்லை

    மிதமான மழை மட்டுமே சென்னைக்கு பெய்ய வாய்ப்பு, தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா பகுதிக்கு கடந்தது  இதனால் சென்னைக்கு பெரு மழைக்கு வாய்ப்பு இல்லை அடுத்த அரை மணி நேரத்திற்கு மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்பு. மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டு உள்ள கார்களை எடுத்து விடலாம் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

  • Chennai Rains LIVE Updates: தமிழ்நாட்டில் மழை படிபடியாக குறைய வாய்ப்பு

    தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வு மைய கணிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்

  • Chennai Rains LIVE Updates:  தமிழ்நாடு கனமழை எதிரொலி இன்று ரயில் சேவைகள் ரத்து

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சென்னை சென்ட்ரல் - போடி நாயக்கனூர் (20601) எக்ஸ்பிரஸ் ரத்து, சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையேயான ஏலகிரி எக்ஸ்பிரஸ் இருமார்க்கங்களிலும் ரத்து. 

    இதேபோல், சென்னை - திருப்பதி இடையேயான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை - திருப்பதி இடையேயான பயணிகள் ரயில்சேவையும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • Chennai Rains LIVE Updates:  கனமழை எதிரொலி ; திருவண்ணாமலை பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  • Chennai Rains LIVE Updates: பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாவட்டங்களில் மட்டும் விடுமுறை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கனமழை காரணமாக நாளை அக்.16 ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ; 

    சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி

  • Chennai Rains LIVE Updates: ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்!

    வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் வெளி மாவட்டம் செல்லும் மக்கள் ஆவடி ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர்.

  • Chennai Rains LIVE Updates: மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    வங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருகிறது. லேட்டஸ்ட் தகவல்களின்படி, சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • Chennai Rains LIVE Updates: அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறைவு

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தீவிர கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்பு, அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு

  • Chennai Rains LIVE Updates: விழுப்புரம் ;  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Chennai Rains LIVE Updates:  துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

    அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள். சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்த பிறகு மக்களுக்கு அறிவுறுத்தல்

  • Chennai Rains LIVE Updates: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

  • Chennai Rains LIVE Updates : சென்னைக்கு முக்கிய அறிவிப்பு

    வங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னையில் கரையை கடக்கும். சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  • சென்னை சென்ட்ரல்: சில ரயில்களின் சேவை ரத்து 

    பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலம் எண் 14ல் தண்ணீர் தேங்கியுள்ளதால், நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாகத் தகவல்.

  • “முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு” 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள #WarRoom -ஐப் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.

     

  • “முதல்வர் உத்தரவு”

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அதிகாரிகள் விழிப்புடன் செயலாற்றி, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் - முதல்வர் உத்தரவு.

     

  • புரட்டாசி மாத பெளர்ணமி

    கனமழை எச்சரிக்கையால், புரட்டாசி மாத பெளர்ணமியை ஒட்டி நாளை திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை

  • ரெட் அலர்ட் டூ ஆரஞ்சு அலர்ட்

    தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பத்து மாவட்டங்கள் ரெட் அலர்ட்டில் இருந்து ஆரஞ்சு அலர்ட்டுக்கு மாறியது

  • நான்கு தினங்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இன்று தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளில் நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது. நேற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்து பகுதி மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தம் தொடர்ந்து அந்த பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிப்ரஷன் மாறக்கூடும். மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அதை தொடர்ந்து வருகின்ற 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரக்கூடும். 

    மழை பொறுத்தவரையில் அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை எச்சரிக்கை பொருத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும். 

    ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவள்ளூர், நாகப்பட்டினம் இந்த மாவட்டங்களில் கன முதல் கனமழையும், திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்

  • பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

    பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் மீட்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • 100 பேருக்கு உணவு

    சென்னையில் தொடர் மழை காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடைக்கலம் தேடிய நபர்களுக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது

  • விடுமுறை

    தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு. அதேபோல கன மழை எதிரொலி காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

    சென்னையிலிருந்து 490 கிமீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 17ஆம் தேதி அதிகாலையில் சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (16.10.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவிப்பு.

  • சென்னை மழை: மக்கள் திண்டாட்டம்

    சென்னை முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று வருகின்றனர். குறிப்பாக சில இருசக்கர வாகனங்கள் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளதால் அதை கடந்து செல்லும்போது பழுதாகி நின்றுப்விட்ட நிலையில் தள்ளிக் கொண்டு செல்லும் நிலையும் இங்கு நிலவி வருகிறது.

  • துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு 

     சென்னையில் அதி கனமழை பெய்து வருவதால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதிகளுக்கும் மழைக்காகவே அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டறைக்கும் சென்று பார்வையிட்டு வருகிறார். இன்று கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற உதயநிதி சென்றபோது கட்டுப்பாட்டரி தொடர்பு கொண்ட பெண் ஒருவர் எண்ணூர் கத்திவாக்கம் ரயில்வே மேம்பாலம் பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது என கூறியுள்ளார்..அதனைத் தொடர்ந்து எர்ணா ஊரில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் பார்வையிட்டார் தொடர்ந்து நீரற்று நிலையத்தையும் ஆய்வு செய்தார்.

  • கனமழையால் கண்ணகி நகர் மக்களின் குமுறல் 

    சென்னையில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்க கூடிய 21 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள கண்ணகி நகர் பகுதிக்கு செல்லக் கூடிய பிரதான சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

  • திருப்பூர்: மழை வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு அதற்கான எண்கள் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் 0421-2321500 என்ற எண்ணுக்கும் இலவச அழைப்பு எண் 1800-425-7023 என்ற எண்ணுக்கும் அழைத்து உடனடி உதவிகளை பெறலாம் என அறிவித்துள்ளது.

  • மழை நீர் அகற்றம்

    OMRல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் இணைந்து தெருக்களில் தேங்கியுள்ள மழைநீர் மோட்டார் மூலம் அகற்றி வருகின்றனர். தெருக்களில் ஆறுபோன்று ஓடும் மழைநீர் குடியிருப்புகளில் புகுறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ஜேசிபி மூலம் மழைநீரை திருப்பி விடும் பணி

    சென்னை OMR சாலை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் ஈஸ்வரன் நகர், சூளைமா நகர், பாலாஜி நகர், குமரன் குடில், செக்ட்ரேட் காலணி உள்ளிட்ட பகுதியில் குடியிருப்புகளை சூழாமல் இருக்க ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்க்கு மழைநீரை திருப்பி விடும் பணி நடைபெற்றது.

  • மின்தடை ஏற்பட வாய்ப்பு!

    • COMMERCIAL BREAK
      SCROLL TO CONTINUE READING

      பெரும்பாக்கம் துணை மின் நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக துணை மின் நிலையம் மூட வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • துணை மின் நிலையம் மூடல் காரணமாக கௌரிவாக்கம் மேடவாக்கம் கோவிலம்பாக்கம் பள்ளிக்கரணை சித்தலப்பாக்கம் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

  • 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மேக கூட்டங்கள் 18 கி.மீ. அகலத்திற்கு படர்ந்திருப்பதால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். மாலை அதி தீவிர கனமழையாக மாறுகிறது

     

  • Chennai Rains LIVE Updates: 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

    கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (அக்.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Rain Updates: அக். 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு!

    தொடர் கனமழை எதிரொலியால் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், சித்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் அக்டோபர் 17 வரை மூட ஆந்திரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

  • Chennai Rains LIVE Updates: இயல்பை விட 84% அதிக மழை

    தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன்,"கடந்த 24 மணிநேரங்களில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக். 1ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட 84% அதிக மழை பதிவாகி உள்ளது" என தெரிவித்துள்ளார். 

  • Chennai Rains Live Updates: துரைசாமி சுரங்கப்பாதை நிலவரம்

  • Chennai Rains LIVE Updates: ஐபிஎஸ் ட்வீட்

    சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ் ட்வீட்

  • Chennai Rains LIVE Updates: கிருஷ்ணகிரியில் அரைநாள் விடுமுறை

    கனமழை காரணமாக கிருஷ்ணகிரியில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

  • Chennai Rains LIVE Updates: ஸ்டாலின் ட்வீட்

  • Chennai Rains LIVE Updates: இந்த மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் இன்று (அக். 15) விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், வேலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

     

  • Chennai Rains LIVE Updates: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றே ரெட் அலர்ட் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 செ.மீ., அளவுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

     
  • Chennai Rains Live Updates: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

  • Chennai Rains Live Updates: பைக் பார்க்கிங்காக மாறும் வீடுகள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மழை வெள்ளத்தில் கார்கள் பாதிக்கப்படாமல் இருக்க மேம்பாலத்தில் பொதுமக்கள் நிறுத்தி வருகின்றனர். இரு சக்கர வாகனத்தை லிப்ட் மூலம் தங்களின் வீடுகளுக்குள் பொதுமக்கள் நிறுத்தி வருகின்றனர்.

  • Chennai Rains LIVE Updates: சீக்கிரம் கிளம்புங்கள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X பக்கத்தில்,"மேகங்கள் சற்று கூட வலுவிழப்பதாக தெரியவில்லை. அது மேலும் குவிந்து அசையாமல் இருக்கிறது. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. மழையின் இடைவெளி இருக்காது போல் தெரிகிறது.

    மேகங்கள் மேலும் குவிந்து காணப்படுகிறது. குறைந்தது 3 மணி நேரத்திற்கு மழை அதிகமாக இருக்கும். எனவே, அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் கிளம்பலாம். நாளையும் மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மி.மீ., மழை பெய்துள்ளது" என்றார்.

  • Chennai Rains LIVE Updates: முதல்வர் ஸ்டாலின் வடசென்னையில் ஆய்வு

    வடசென்னை பகுதியான யானைகவுனியில் மழை தொடர்பான பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் மழை, வெள்ள மீட்புப் பணி, கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

  • Chennai Rains LIVE Updates: சென்னைக்கு ரெட் அலர்ட்

    சென்னையில் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • Chennai Rains LIVE Updates: சென்னையில் மாற்றுப்பாதை

    ஐஸ் ஹவுஸில் இருந்து GRH சந்திப்புக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேனி ஹை ரோட்டை நோக்கி வலதுபுறம் திரும்பி, ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்கள் திசைதிருப்பப்படாமல் தங்கள் வழியில் செல்லலாம். GRH சந்திப்பில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு ஏதும் மாற்றம் இல்லை. இவை மட்டும்தான் மழைப்பொழிவு காரணமாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. 

  • Chennai Rains LIVE Updates: எந்தெந்த சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    திருமங்கலம் மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி செல்லும் வழியில் மழைநீர் தேங்கி உள்ளது. 

    நெற்குன்றம் சந்திப்பு மற்றும் ரயில் நகர் சந்திப்பு இடையே உள்ள பி.ஹெச். சாலையில் மழைநீர தேங்கி உள்ளது. 

    மேட்டுக்குளம் தீயணைப்பு நிலையம் அருகே மழைநீர் தேங்கி உள்ளது.

    சேத்துப்பட்டு பெரியார் பாதை 100 அடி சாலை முழுவதும் நீர் சூழ்ந்து உள்ளதால் அந்த பாதை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

    சென்னை அண்ணா சாலையின் அருகே ராயப்பேட்டை பட்டுல்லாஸ் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. 

    காந்தி மண்டபம் சாலை குழந்தைகள் பூங்கா அருகில் மழைநீர் தேங்கி உள்ளது. 

    இளைய முதலி தெரு முதல் வண்ணாரப்பேட்டை காமராஜர் சாலை வரை மழைநீர் தேங்கி உள்ளது.

  • Chennai Rains LIVE Updates: உதயநிதி பேட்டி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    "சென்னையில் மட்டும் 300 நிவாரணம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழையால் விழுந்த 7 மரங்கள் அக்கற்றப்பட்டுள்ளன. சென்னையில் மழையால் எங்கும் மின்தடை ஏற்படவில்லை. நிவாரண முகாம்களில் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இரு சுரங்கப்பாதைகள் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது, இன்னும் ஒரு மணிநேரம் மழை நின்றாலே நீரை வெளியேற்றுவிடுவோம்" என்றார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

     

  • Chennai Rains LIVE Updates: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எப்போது?

    சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். நாளை (அக். 16) பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

  • Chennai Rains LIVE Updates: ஒருமணி நேரத்திற்கும் மேலாக அடிக்கும் மழை

    சென்னையின் ராயப்பேட்டை, மந்தைவெளி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

  • Chennai Rains LIVE Updates: இந்த பாதையை பயன்படுத்தாதீர்கள் - காவல்துறை

    சேத்துப்பட்டு பெரியார் பாதை 100 அடி சாலை முழுவதும் நீர் சூழ்ந்து உள்ளதால் அந்த பாதை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது

  • TN Rains Live Updates: மெட்ரோ ரயில் தற்காலிக நிறுத்தம்

    சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் செல்லும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக கூடுதல் மெட்ரோ சேவைகள் இயக்கப்படுவதால் விமான நிலையம் - சென்ட்ரல் இடையே நேரடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்ல விரும்புவோர், விம்கோ நகர் ரயிலில் ஏறி, ஆலந்தூரில் இறங்கி வேறு ரயில் மாறிக்கொள்ளும்படி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

  • TN Rains Live Updates: கடும் போக்குவரத்து நெரிசல்

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில் அசோக்நகர் மற்றும் வடபழனியில் இருந்து கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  • TN Rains Live Updates: வார் ரூம்மில் உதயநிதி ஆய்வு

    சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூம்மில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளார். அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் உடன் உள்ளனர். 

  • TN Rains Live Updates: தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது அவரது X பதிவில்,"சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் முழுவதும் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்த மழைக்காக பெரும் மேகங்கள் தயாராகி வருகின்றன, அவை இப்போது நகர வருகின்றன. இன்று மழைப் பொழிவு வரும், போகும் என்ற நிலையிலேயே இருக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை சென்னை கடற்கரை அருகே வட தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என கூறப்படுகிறது.

  • TN Rains Live Updates: அபராதம் இல்லை

    கனமழை முன்னெச்சரிக்கையாக மக்கள் மேம்பாலங்களில் கார்களை நிறுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

  • TN Rains Live Updates: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    "தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • TN Rains Live Updates: வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. 

  • TN Rains Live Updates: ஏன் தக்காளி விலை உயர்வு?

    தக்காளி அதிகம் பயிரிடக் கூடிய தமிழக உள்மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக வரத்து குறைவு. சராசரியாக ஒரு நாளைக்கு 75 லாரிகளில் வந்த தக்காளி தற்போது 50 லாரிகள் மட்டுமே வருவதால் இந்த விலை ஏற்றம்

  • TN Rains Live Updates: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

    கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. நேற்று 50 ரூபாய் - 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 80 ரூபாய் - 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.

  • TN Rains Live Updates: எங்கு அதிக மழை?

    சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 8 சென்டிமீட்டர் என்ற அளவில் கனமழை பெய்துள்ளது. அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை, காஞ்சிபுரம் மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 7 என்ற அளவில் கனமழை பெய்துள்ளது

  • TN Rains Live Updates: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி

    "வங்கக் கடலில் நிலைகொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. மேற்கு - வட மேற்கு திசையில் மெதுவாக நகரும், தமிழகம் ஆந்திரா நோக்கி பிற்பகலுக்கு பின் நகரும். தமிழகத்தை அடைந்து பின் ஓமன் கடற்கரையில் வலுவிழக்கும்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • TN Rains Live Updates: உதயநிதி ட்வீட்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நள்ளிரவு ஆய்வு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது X தளத்தில்,"சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் சற்று நேரம் முன் ஆய்வு செய்தோம்.

    நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறிந்தோம். நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை அம்பேத்கர் சாலையில் இருந்து ஆய்வு செய்தோம்.

    மேலும், அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள், கருத்துக்களைப் பெற்றோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்" என பதிவிட்டுள்ளார். 

  • TN Rains Live Updates: உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலின்போது, நாராயணபுரம் ஏரி சேதமடைந்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  • TN Rains Live Updates: சென்னையில் ஆரஞ்சு அலர்ட்

    சென்னையில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் கனமழை பெய்ததால் தற்போது தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.  

  • TN Rains Live Updates: சென்னையில் கனமழை தொடங்கியது

    சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவை தொடர்ந்து தற்போது மேலும் காலையிலும் கனமழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, அண்ணா மேம்பாலும், மந்தைவெளி, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. 

  • TN Rains Live Updates: சோழிங்கநல்லூரில் பேய் மழை

    சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் மின்தடை இருந்ததாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 10 செ.மீ., மழை பெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

  • TN Rains Live Updates: எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவையில் அரைநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • TN Rains Live Updates: சென்னையில் மழை

    "சென்னையின் வடக்கு புறநகர் பகுதிகளில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அடுத்த 15 முதல் 30 நிமிடங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும்" என தனியார் வானிலை ஆய்வாளர் பதிவிட்டுள்ளார். 

  • TN Rains Live Updates: கோவையில் அரைநாள் விடுமுறை

    தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று பிற்பகலுக்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது, இன்று பிற்பகல் வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியத்திற்கு பின்னரே கனமழை எச்சரிக்கை இருப்பதால் ஆட்சியர் நடவடிக்கை

  • TN Rains Live Updates: இயல்பு நிலையில் சென்னை

    சென்னையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவு 2 மணிவரை கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் அதன்பின்னர் பெரியளவில் மழை இல்லை. தற்போது வரை மழையின்றி இயல்பான நிலை நீடிக்கிறது. இரவு முழுவதும் மழை பெய்தாலும் காலையில் பெரியளவில் எங்கும் நீர் தேங்கவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link