அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவதற்கான அரசாணை வெளியீடு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள சுமார் 2,381 அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி முதல் சோதனை முயற்சியாக 3 ஆண்டுகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக அரசு  7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 


LKG, UKG பயில்வதற்கு 53 ஆயிரத்து 993 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக, வேலூர் மாவட்டத்தில் 171 மையங்களில், 4803 மாணவர்களும், குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 20 மையங்களில் 422 மாணவர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 


அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துதல், கற்றல் திறன் மேம்பாடு, மாணவர்களின் ஆங்கில எழுத்து மற்றும் பேசும் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு திட்டத்தின் கீழ் இந்த LKG, UKG வகுப்புகள் தொடங்கப்படுகிறது.


இதற்காக 6 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறையும், 1 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை சமூகநலம் மற்றும் மதிய உணவுத்திட்ட துறையும் ஒதுக்கியுள்ளதாகவும் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.