புதுவையில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு கடைசியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 


இதனையடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையில் கடந்த 8.5.2018 அன்று புதுச்சேரியில் வார்டுகளை 4 வார காலத்துக்குள் சீரமைத்து, 8 வார காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வார்டுகள் மறுசீரமைத்து அரசாணையை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...


"உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33%, ஓபிசி- 33.5%, எஸ்சி இடஒதுக்கீடு உள்ளாட்சி மக்கள் விகித அடிப்படையில் நியமிக்கப்படும். எஸ்டி- 0.5%. தற்போது அரசாணை அரசு இணையத்தில் உள்ளது. ராஜ்நிவாஸ் இணையத்திலும் பகிர்ந்துள்ளோம்.


வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் புதுச்சேரியில் நடைபெறும் என்று எதிர்பார்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் மூலம் 1,147 பிரதிநிதிகள் மக்கள் சேவைக்காக தேர்வு செய்யப்படுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஜனநாயக அடிப்படையில் மக்களின் தேவைகள் பூர்த்தியாகும் எனவும், கூடுதல் நிதி இந்திய அரசிடம் இருந்து கிடைக்க பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.