தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும்: EPS
தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்!!
தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்!!
உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால், தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் கல்விப்புரட்சியால் மாணவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்கவில்லை. திறமையின் அடிப்படையிலேயே தமிழக மாணவர்கள் டெல்லியில் பணிபுரிகின்றனர்.
இயற்கை ஒத்துழைத்தால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 3 MLA-க்களுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
22 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றால் நம்பிக்கையில்லாத தீர்மானம் எதற்கு? இவ்வாறு மு.க. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கவில்லை; திறமை அடிப்படையில் டெல்லியில் தமிழர்கள் இடம்பெறுகின்றனர்.
மேலும், தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும் உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவிவத்தார்.