குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் சன்னி தியோல் வேட்பு மனு தாக்கல்!!
குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் இன்று வேட்புமனுவை தாக்கல்!!
குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் இன்று வேட்புமனுவை தாக்கல்!!
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவைக்கான தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகின்றது. இதை தொடர்ந்து, இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி டியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க. வேட்பாளராக மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் சன்னி டியோல் சமீபத்தில் பா.ஜ.க. கட்சியில் இணைந்தார். அன்றிரவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாஜக சார்பில் குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இன்று காலை அவர் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார். நேற்று பிரதமர் மோடியை டெல்லியில் அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சன்னி தியோல் மிகவும் பணிவுடையவர் என்றும், நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். குருதாஸ்புர் தொகுதியில் வெற்றி பெறுவார் எனவும் மோடி தெரிவித்துள்ளார். இதே தொகுதியில் நான்கு முறை வெற்றிபெற்ற வினோத் கன்னாவின் நினைவிடத்திற்கு சென்று சன்னிதியோல் மரியாதை செலுத்தினார்.