நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. இன்று தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு தொடர்ந்து மாலை மாலை 6 மணி வரை நடைபெற்றது. இன்று வாக்குபதிவின் போது சில இடங்களில் இயந்திரங்கள் சரியாக செயல்பட வில்லை. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. ஒரு சில தொகுதிகளில் வன்முறையும் அரங்கேறியது. ஆனாலும் தொடர்ந்து வாக்குபதிவு நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குபதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வரிசையில் வந்து நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கபட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால், அந்த தொகுதிக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் மாலை 5 மணி வரை 67.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாக்குமரி தொகுதியில் 50.07 சதவீத வாக்குகள் பதிவாகின.