கரூர் தொகுதி: பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு
Lok Sabha Elections: கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று தாமரை சின்னத்திற்கு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர், தொழில்பேட்டை , வெள்ளாளப்பட்டி, புலியூர் பேருந்து வடக்கு பாளையம், காளிபாளையம், அப்பியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Lok Sabha Elections: இந்தியாவில் இது தேர்தல் திருவிழா காலம். இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரங்கள் நடந்துவருகின்றன. சின்னத்தை பார்த்தும், பிறர் சொல்வதைக் கேட்டும் மக்கள் வாக்களிப்பது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அரசியல் புரிதல் அதிகமாகவே உள்ளது. சிறு ஆதாயங்களுக்காக ஆசைப்பட்டு ஐந்தாண்டுகள் அல்லல்பட மக்கள் தயாராக இல்லை. வேட்பாளரின் நோக்கம், அவர் செய்துள்ள சமூக பணிகள், மக்கள் சேவையில் அவரது அனுபவம், ஆர்வம், தகுதி என வாக்களிக்கும் முன் மக்கள் அனைத்தையும் அலசி ஆராய்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் முழு வேகத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது. கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று தாமரை சின்னத்திற்கு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர், தொழில்பேட்டை , வெள்ளாளப்பட்டி, புலியூர் பேருந்து வடக்கு பாளையம், காளிபாளையம், அப்பியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க | பிரதமர் ரோட் ஷோ மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - அதிமுக ஜெயவர்தன்
வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்
கரூர் மாவட்டம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று தாமரை சின்னத்திற்கு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர் தொழில்பேட்டை வெள்ளாளப்பட்டிபுலியூர் பேருந்து வடக்கு பாளையம், காளிபாளையம், அப்பியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு தெருவாக கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது, வாக்காளர்களிடம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பொதுமக்கள் வாக்காளர்கள் தன்னை ஆசிர்வாதம் செய்ய வேண்டுமென காலில் விழுந்து வணங்கினார் .
இந்நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாநகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் கரூர் மாவட்டத்தில் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்முறை பொதுமக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார். பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் இது மாநிலத்திற்கான தேர்தல் அல்ல மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் நீங்கள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு இம்முறை தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் பேசினார்.
மேலும் படிக்க | திருச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ