சமையல் கியாஸ் விலை ரூ.66.50 ஆக உயர்வு

சென்னையில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, 66.50 ரூபாய் உயர்ந்து உள்ளது.
சென்னையில் போன மாடம் அதாவது ஜனவரி மாதம் சிலிண்டர் ரூ.594.50 விற்பனையானது. இந்த மாதத்திற்கான விலை மாற்றம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ரூ.66.50 உயர்த்தப்பட்டு சிலிண்டர் விலை ரூ.661 ஆக அதிகரித்துள்ளது.
இதே போல சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 104.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் வணிக பயன் பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1223.50 க்கு விற்கப்பட்டது. இந்த மாதம் அதன் விலை ரூ.1338 ஆக உயர்ந்துள்ளது.
ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.