உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் போன்றவை வைக்க சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் உயிருடன் இருப்பவர்களின் படங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டது. மேலும், கட் அவுட், பேனர் வைக்க அனுமதிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது. வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட் அவுட்கள் வைக்க அனுமதிப்பதா என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.