சிலை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சிலைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தொழிலதிபர் ரன்வீர் ஷா, கிரண்ராவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக சிலை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பரிமுதல் செய்யப்பட்டுள்ள சிலைகள் தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமாய் உத்தரவிட்டுள்ளது.


சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில், IG பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 ஐம்பொன் சிலைகள், 22 கல்தூண்கள், பழங்கால கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன.


மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 100 ஆண்டுகள் பழமையானது. மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 100 கோடி வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனைதொடர்ந்து, ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது. அந்த வகையில் ரன்வீர் ஷா-வின் பண்ணை வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த சோதனையில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 


இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள ரன்வீர் ஷா நண்பரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு சிலைகள் மீட்க்கப்பட்டன.