கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருவிழாக்களின் போது கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். சமீப காலமாக இந்த கலை நிகழ்ச்சிகள் எல்லை மீறு சென்று கொண்டிருக்கின்றது, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில ஆபாச நடனங்கள் நடைப்பெற்று வருகின்றது. 


இதனை தடுக்கும் விதமாக தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவில்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்க வேண்டும் என்றும், ஆபாச நடனங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கு விசாரித்த நீதிபதி... முன்பெல்லாம் திருவிழாக்களின் போது வில்லுபாட்டு, கிராமிய பாட்டு, புராண நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்ட தமிழகத்தில் தற்போது கலாச்சார சீரழிவு நிகழ்ந்தேறி வருகிறது. அறிவியல் முன்னேற்றம்  என்ற பெயரில் கலாச்சாரத்தை ஒத்தி வைக்க முடியாது என குறிப்பிட்டார்.


இதனையடுத்து கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலாச்சார நிகழ்ச்சிகளை உள்ளூர் காவல்துறை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும், அதில் ஆபாசம் இருந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்!