தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு 2023 ஜனவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கவுன்சில் பதிவாளர், கடந்த அக்டோபர் 19ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மனுவில், மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு மருத்துவர்கள் என்றும், நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்குடைய சில அரசு மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர் என மனுவில் கூறியுள்ளார்.



மேலும் படிக்க | மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026 அக்டோபரில் முடிக்கப்படும்: மத்திய அரசு 


மருத்துவ கவுன்சில் வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவரிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம் போல் அதை பயன்படுத்தி வருவதாகவும், கடந்த மூன்று தேர்தல்களில் இதே நடைமுறையை பின்பற்றி தகுதியான வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.



வாக்குச்சீட்டு நடைமுறை முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதால், தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவை 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு,  விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.


மேலும் படிக்க | அரசு கேபிள் சேவை! உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ