Santhan Case, Madras High Court: யாழ்ப்பாணத்தில் வசித்துவருபவரும், நோய் வாய்ப்பட்டுள்ளவருமான தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆன சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் இன்று (பிப். 29) விசாரணைக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சாந்தனை இலங்கை அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிருஷ்டவசமாக நேற்று (பிப். 28) உயிரிழந்துவிட்டதாக கூறினார். 


சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், கடந்த பிப் 22ஆம் தேதி அவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக கூறினார். 


மேலும் படிக்க | பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி, ரூ.2997யை இழந்த துணி வியாபாரி


சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என 
நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கடந்த மாதம், அதாவது ஜனவரி 24ஆம் தேதி முதலே சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரால் நகர கூட முடியவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து, இன்று பிற்பகலுக்குள் சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.


கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி அந்த வழக்கின் அனைத்து கைதிகளுடன் விடுவிக்கப்பட்டார். 


அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இலங்கை தமிழரான சாந்தனுக்கு கடந்த ஜனவரி 24ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய அவர் வைத்த கோரிக்கையை ஏற்று, அவர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். 


நேற்று அவர் உயிரிழந்ததாக தலைமை மருத்துவர் தெரிவித்த நிலையில், கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சாந்தனின் தாயாரும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். தற்போது சாந்தன் மற்றும் அவரது தாயாரின் இருவரின் ஆசையும் நிராசையானது மனதை கனக்கச் செய்கிறது. சாந்தனின் உடல் இன்று இலங்கைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. 


மேலும் படிக்க | சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்! அதிகாரபூர்வ அறிவிப்பு
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ