கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. குறிப்பாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு சட்டம் இயற்றி, அதன்படி கோயில் காலிப் பணியிடங்களில் இந்துசமய அறநிலையத்துறை மூலம் அர்ச்சகர் நியமனம் நடைபெற்று வருகிறது. இதில், அரசு நியமிக்கும் அர்ச்சகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்கு தொடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்து எடுக்கும் முடிவுகளுக்கு அர்ச்சகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ் - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை


இதன் ஒரு பகுதியாக சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து கோயில் அர்ச்சகர் சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில்  தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக கோவில் தக்கார்கள் நியமிக்கலாம் என தீர்ப்பளித்துள்ளார்.


கோவில்களின் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை என்றும், அந்தந்த கோவில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை  நியமிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆகம குழு அறிக்கைக்கு காத்திருக்காமல் அந்தந்த கோவில்களில் பின்பற்றப்படும் ஆகமங்களுக்கு பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இனி அர்ச்சகர்களாக நியமிக்க முடியும். இந்த முடிவை கோவில் தக்கார்களே எடுக்க முடியும் என்பதும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. 



இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி, கோவில்களில் கடவுள் நம்பிக்கை கொண்ட யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திராவிட மாடல் அரசின் வாதத்தினை ஏற்று  அனைத்து இந்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்! என கூறியுள்ளார். 


மேலும் படிக்க | திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி - சேலத்தில் பரபரப்பு பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ