மதுரை AIIMS மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவு..!!
மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழத்தில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைக்க 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மருத்துவ மனைக்கான இடத்தை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைக் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு ஜனவரி 27-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் அடுத்தாண்டு அக்டோபரில் முடியும் என்பதோடு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் செயல்படுவதற்கான நிதியுதவியை மத்திய அரசு வழங்க உள்ளது என்றார்.
ALSO READ: Kendriya Vidyalaya பள்ளிகளில் ஆசிரிய நியமனம்: மத்திய அரசு பதில்- வெங்கடேசன் MP
எய்மஸ் மருத்துவமனையின் தற்காலிக புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை வாடகைக் கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைய நடத்துவதற்கான வாடகையை தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மதுரை அரசு மருத்துவ கல்லுாரி MBBS சேர்க்கைக்கு 250 இடங்கள் கிடைத்தது பெருமையான விஷயம் எனக் குறீப்பிட்ட சுகாதார செயலர், மருத்துவ படிப்பிற்கான வகுப்பறை, நர்ஸ், டாக்டர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ALSO READ: AIADMK: ஜெயலலிதா சமாதியில் தியானம் கலைந்த சசிகலாவின் அஞ்சலி! நடந்தது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR