மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எய்ம்ஸ் மதுரை அரசு மருத்துவமனையில் தங்களுடைய மாணவர்களை தற்காலிகமாக ராமநாதபுரம் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டு மாணவர்களுடன் வலிமை அதிவேகமாக அதிகரிக்கக்கூடும் என்பதால் ஆர்வமுள்ள தரப்பினர் மதுரை AIIMS க்கு தங்கும் விடுதியை வாடகைக்கு எடுக்க தங்களின் சிறந்த விலையை வழங்கலாம் என்று கோரப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு ஓராண்டு மற்றும் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை உயர்த்த வலியுறுத்துவோம்: திருப்பூர் எம்பி.சுப்ராயன்


மேலும் 50 மாணவர்கள் தங்குவதற்கான காற்றோட்டமான அறைகள், ஒரு நூலகம், சாப்பிடுவதற்கு தனியான இடம் மற்றும் 50 மாணவர்களுக்கான சுத்தமான கழிப்பறை போன்றவை இருக்க வேண்டும் என்றும். மாணவர்கள் கிரிக்கெட், வாலிபால், பேஸ்கட் பால், புட்பால் விளையாடுவதற்கு வெளி விளையாட்டு அரங்கம் மற்றும் பேட்மிட்டன் டேபிள் டென்னிஸ் போன்ற உள்விளையாட்டு அரங்கத்திற்கும் இடம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதியின் முன்மொழியப்பட்ட வசதிகள் தற்போது மாணவர்கள் தங்கி உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி பகுதி ஜூலை மாதம் நான்காம் தேதி தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டுமென்று அதன் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஏற்கனவே ராமநாதபுரத்தில் உள்ள எய்ம்ஸ் மாணவர்களை மதுரைக்கு மாற்றுவதற்காக மதுரையில் தற்காலிக இடம் வேண்டுமென்று எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ராமநாதபுரத்திலேயே கூடுதலாக விடுதிகள் வேண்டுமென்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வயிற்று பிழைப்பிற்காக சென்ற மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ