பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த, ச.நாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் தொடர்பாக மதுரை தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியராகவும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்ட நாகராஜன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் முன்னதாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தார். 


முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் நாகராஜன், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பணிகளில் முழுகவனம் செலுத்தப்படும் என்றார். தேவைப்பட்டால் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.