கோடையில் தடையின்றி மின் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜா புயல் பாதித்த பல கிராமங்கள் இதுவரை மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் என கூறி சென்னையை சேரந்த  தேசிகன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மேலும் கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 1 லட்சம் மின் கம்பங்கள், 1000 மின் மாற்றிகள், 201 துணைமின் நிலையங்கள் ஆகியவை முழுமையாக சேதமடைந்துள்ளன. 


இயற்கை பேரிடர் காலங்களில் மின்சாரம் தடையின்றி கிடைத்தால்தான் பேரிடர்களில் இருந்து விரைவில் மீள முடியும். எனவே எதிர்காலத்தில் மின் விநியோக பாதிப்பு, மின் துண்டிப்பு போன்றவற்றை தவிர்க்கும் வகையில் பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கையையும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.


மேலும் பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்வது எளிமையானது, பராமரிப்பு செலவிற்கு அதிமான தொகை செலுத்த தேவையிருக்காது, எனவும், மின் திருட்டுக்கள் குறையும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.


பூமிக்கடியில் மின்இணைப்பு அமைப்பதால் பறவைகள், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களுக்கு பாதிப்பு இருக்காது. ஆகவே கடலோர பகுதி உள்பட தமிழகம் முழுவதும் பூமிக்கடியில் மின் கம்பிகள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, தமிழகத்தில் மின் கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியத்திடம் போதுமான நிதி உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர். 


மேலும் காற்றாலை மின்னுற்பத்தியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது தனியாருக்கு விற்கப்படுகிறதா? என்றும், தமிழகத்தின் மின் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறதா, அவ்வாறு வாங்கப்படால் மின்சாரத்திற்கான கட்டணம் எவ்வளவு, சூரிய ஒளி மின் உற்பத்தி எவ்வளவு, அந்த மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா அல்லது தனியாருக்கு வழங்கப்படுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 


இந்த வழக்கு தொடரைபா தமிழக மின்வாரியத் தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிரப்பித்து வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.