பாஜக மாநில நிர்வாகியை இரவோடு இரவாக கைது செய்த மதுரை போலீஸ்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவராக கருதப்படும் எஸ்ஜி சூர்யாவை மதுரை காவல்துறை சென்னையில் இரவோடு இரவாக கைது செய்தது.
தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்ஜி சூர்யா. மாநில பொறுப்பில் இருக்கும் அவர் தமிழக அரசு குறித்தும், முதலமைச்சர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினரை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். சில நேரங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் போலி தகவல்களை கொண்டதாக இருப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டி, ஆதாரத்துடன் பதில் வழங்குவதும் இருக்கும். உண்மைக்கு மாறாக எஸ்ஜி சூர்யா பதிவிடும் கருத்துகள் மற்றும் தகவல்களுக்காக அவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வப்போது இணைய பக்கங்களில் திமுக ஆதரவாளர்கள் கோரிக்கை வைப்பார்கள்.
மேலும் படிக்க | மாமியார் உயிருக்கு Rate Fix செய்த மருமகள்! கம்பி எண்ண வைத்த போலீஸ்
இந்நிலையில் எஸ்ஜி சூர்யாவை மதுரை போலீஸ் இரவோடு இரவாக கைது செய்து அழைத்துச் சென்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்' என பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு சென்னை திநகரில் உள்ள எஸ்.ஜி.சூர்யா வீட்டிற்கு சாதாரண உடையில் வந்த மதுரை போலீசார், அவரை கைது செய்து மதுரை அழைத்துச் சென்றனர். சூர்யா கைது செய்யப்பட்டத்தை அறிந்த பாஜகவினர் சென்னை காவல் ஆணைய அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் பரபரப்பான நிலை உருவானது. ஒரு பாஜகவினரை கைது செய்தாலும், அதற்கான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில் இந்த கைது நடந்துள்ளது.
மேலும் படிக்க | குண்டாஸ் வழக்கு போட்ருவேன் - வைரலாகும் மாவட்ட ஆட்சியர் ஆடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ