வேலூர் மாவட்டம்,  அணைக்கட்டு அருகே ஊனை கிராமத்தில், பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீட்டு மனை உள்ள பழங்குடியினருக்கு, பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி,  நீண்ட காலமாக குடிசை வீடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு அரசு வீட்டு மனை பட்டா,  வீடு கட்டுதல் போன்ற அடிப்படை தேவைகளை பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை போடும் கணக்கு: வாய்ப்பில்லை என சொன்ன செல்லூர் ராஜூ



ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  வருகின்ற ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள 79395 கிராமங்களை உள்ளடக்கிய 12,525 ஊராட்சி மன்றங்கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ. 4000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.   இப்பணிகள் வருகின்ற பருவமழை காலத்திற்கு முன்னதாக செப்டம்பர் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து கிராம சாலைகளுக்கான பணிகள்  முடிக்கப்படும்.  


ஒரு கிராமத்தின் அடிப்படை வசதிகளான சாலைகள்,  குடிநீர்,  மின்விளக்கு ஆகிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி முழுவதும் தன்னிறைவு பெற்ற கிராமங்களை ஏற்படுத்துவது அரசின் முக்கிய நோக்கம்.  சுமார் 50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு அவர்களின் கடைசி வீடு வரை சாலை வசதி ஏற்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாகும்.  தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும்.  கிராமப்புறங்களில் இருக்கும் மகளிர், நகரங்களுக்கு செல்லும் பொழுது உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணிக்க சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம் பல கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர் என வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ