மகளிா் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு: காலவகாசம் கேட்கும் மக்கள்
மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இதற்கான காலவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்டு 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5 ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விடுப்பட்டவர்களுக்குகாக கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நிலையில் இன்றுடன் நிறைவடைய உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக இதுவரை 1.54 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் திங்கள்கிழமை முதல் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரம் கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.
மேலும் படிக்க | ஜோடிகளே உஷார்..! தனியார் விடுதியில் ரகசிய கேமரா-வசமாக சிக்கிய ஊழியர்!
தகுதி வாய்ந்த விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால், அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த காலவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே அரசு எதிர்பார்த்ததைவிட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அரசு மீண்டும் காலவகாசம் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் தெளிவாக அரசு இருப்பதாகவும், தன்னுடைய நேரடி பார்வையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் கூறினார். மேலும், ஏழை எளிய பெண்கள் அனைவருக்கும் இந்த திட்டம் சென்று சேருவது உறுதி செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | சென்னை: ரூ. 500 கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்ற நினைத்த முதியவர் - உஷாரான வியாபாரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ