மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட நாளை மறு நாள் முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேசமயம், போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிமுக சார்பில் 40 தொகுதிகளில் இருந்தும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 


இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமை அலுவலகங்களில் நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் விருப்ப மனுவை பெற 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.