கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக கட்சியின் அனைத்து பொதுக்கூட்டங்களும் மார்ச் 31, 2020 வரை நிறுத்தி வைப்பதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் "கொரோனா வைரஸ்" காய்ச்சல் பரவி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம்  கட்சியின் சார்பாக நடைப்பெறவிருந்த அனைத்து பொதுக்கூட்டங்களும் தமிழகம் முழுவதும் மார்ச் 31, 2020 வரை நிறுத்தி வைக்குமாறு கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதுதொடர்பான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "தற்போது எங்க நோக்கினும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காச்சல் காரணமாக மக்கள் அனைவரும் ஒரு அச்சசூழலில் இருக்கின்றனர்.



எனவே தலைவர் வழிகாட்டுதலின் படி, கட்சியின் அனைத்து பொதுக்கூட்டங்கள், கூட்டங்கள் என அனைத்தும் மார்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. 


நமது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதோடு, நமது சக மனிதர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பது நமது பொறுப்பு மற்றும் கடமையாகும். எனவே பொறுப்புள்ள குடிமகன்களாக, நாம் ஒவ்வொருவரும் இந்த கடினமான சூழலை தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இருந்து, இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து இம்மானுட சமூகத்தை காக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


நாட்டுமுழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக 11 மாநிலங்களில் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அடைக்கப்பட்டுள்ளது, பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், திரையரங்குகள் என அனைத்தும் இயல்புநிலை திரும்பும்வரை அடைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தற்போது மக்கள் பெரும்கூட்டத்தை தவிர்க்கும் விதமாக தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.