மேட்டுப்பாளையம் விபத்து: உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியமை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியமை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு கீழே இருந்த வீடுகள் மீது விழுந்தன. இதில் 4 வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே 17 பேரை பலிகொண்ட சுவர் கட்டிய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.