30கி கடல்அட்டைகளை கடத்த முயன்ற 5 பேர் கைது!
ராமேஸ்வரத்தின் மண்டபம் பகுதியில் 30 கிலோ கடல்அட்டைகளை கடத்த முயன்றதாக 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்!
ராமேஸ்வரத்தின் மண்டபம் பகுதியில் 30 கிலோ கடல்அட்டைகளை கடத்த முயன்றதாக 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்!
கடல்அட்டைகள் என்பவை உலகில் எல்லாக் கடல்களிலும் காணப்படும் எகினோடேர்மேற்றா என்ற விலங்கு இனத்தினை சேர்ந்தவை. இந்த கடல்வாழ் பிராணிகளுக்கு கள்ளச்சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. இதனால் இதனை மீனவர்களுக்கு இந்த கடல் அட்டைகளின் மீதான ஆர்வம் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ராமேஸ்வரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருக்கும் மீனவர்கள் சுமார் 39 கிலோ மதிப்பிலான கடல்அட்டைகளை பிடித்து அதனை இருசக்கர வாகனம் வாயிலாக கடத்த முயன்றுள்ளனர்.
கடல்அட்டைகளை கடத்த முயன்ற இவர்களை இன்று காலை மண்டபம் பகுதி வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 30 கிலோ மதிப்பிலான கடல் அட்டைகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.