சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வழித்த டங்களில் தண்டவாள சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி வரும் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு இடங்களில் நடக்கவுள்ளது. இதனால், கோட்ட பகுதியில் இயங்கும் சேலம்- கோவை ரயில், விருத்தாச்சலம் ரயில் உள்பட 6 ரயில்கள், ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் (06802) வரும் பிப்ரவரி 3, 4, 6, 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் சேலம் - கோவை எக்ஸ்பிரஸ் (06803) வரும் பிப்ரவரி வரும் 3, 4, 6, 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோல், கரூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் (06882) வரும் பிப்ரவரி 14, 21, 28ம் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் திருச்சி- கரூர் எக்ஸ்பிரஸ் (06123) வரும் பிப்ரவரி 14, 21, 28ம் தேதிகளிலும், விருத்தாச்சலம் - சேலம் ரயில் (06121), சேலம் - விருத்தாச்சலம் ரயில் (06896) ஆகியவை வரும் 21, 28ம் தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | Railway Budget 2023 Expectations: ரயில் பயணிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?


பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (16844) வரும் 14, 21, 28ம் தேதிகளில் ஒரு பகுதியாக கரூர்-திருச்சி இடையே ரத்து செய்யப் பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் வரும் 14 21, 28 ஆகிய தேதிகளில் ஒரு பகுதியாக கரூர் திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.



மறு மார்க்கத்தில் திருச்சி பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 14 , 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சி கரூர் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் கரூரில் இருந்து புறப்பட்டு பாலக்காடு டவுன் வரை மட்டுமே சொல்கிறது திருச்சி ஈரோடு எக்ஸ்பிரஸ் 14, 21, 2 8ஆம் தேதிகளில் திருச்சி கரூர் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே டெல்லி கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | Budget 2023: பெட்ரோல், தங்கம் விலைகள் அதிகரிக்குமா! அதிர்ச்சி தருவாரா நிதியமைச்சர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ