தனி மாநில அந்தஸ்து கோரி புதுவை, தமிழக கட்சிகள் போராட்டம்!
தனி மாநில அந்தஸ்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறல் உள்ளிட்ட கோரிக்கைளுக்காக முன்வைத்து புதுச்சேரி அரசியல் கட்சியினர் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தனி மாநில அந்தஸ்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறல் உள்ளிட்ட கோரிக்கைளுக்காக முன்வைத்து புதுச்சேரி அரசியல் கட்சியினர் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பாஜக-வின் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது, மாநிலத்திற்கு போதுமான நிதியினை அளிக்காமல் வஞ்சிக்கிறது, மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிகார வரம்பு மீறுகிறார். எனவே புதுச்ச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மேலும் மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் புதுவை அரசியல் கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
காவல்துறை அனுமதி பெற்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று காலை முதல் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். புதுவை கட்சிகளின் கோரிக்கைகளை புரிந்துக்கொண்டு தமிழக கட்சி தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுக்கொண்டனர்.
முன்னதா புதுவை அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சிகளான திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரசின் தோழமை கட்சிகளான திமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் என 21 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து ரெயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
டெல்லி சென்ற தலைவர்கள் இன்று ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதாகைகளை கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.