காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


பூந்தமல்லியில் தங்கவைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஃபுட் பாய்சன் ஆகி 200-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என பல இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


இதில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து திரும்பிய நிலையில், எட்டு பெண்களுடைய நிலை என்னவென்று தெரியவில்லை.



இதனைக் கண்டித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ALSO READ | போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடியை தாக்க முயற்சி


கடந்த 9 மணி நேரமாக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டம் காரணமாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நிற்கின்றன. 


மாவட்ட காவல் கண்காணிப்பாளரிலிருந்து அனைத்து அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டுவரும் பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 


ஆனால், இதில் சமரசம் எட்டப்படவில்லை. இன்னும் சற்று நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாகச் செங்கல்பட்டு சாலையில் இருக்கக்கூடிய புளியம்பாக்கம் என்ற இடத்திலும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


அதேபோல் தாம்பரம் செல்லும் வழியில் உள்ள வடகால் எனும் பகுதியிலும் போராட்டத்திலும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “உணவு விஷமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறோம். இருந்தபோதிலும் அவர்கள் சமாதானம் ஆவதாகத் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.


ALSO READ | எங்கே இருக்கிறார் ராஜேந்திராபாலாஜி? சகோதரி மகன் உள்ளிட்ட 3 பேர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR