கேரளா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இல்லம் சென்று புதுமணமக்களை வாழ்த்தினார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரளா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா அவர்களின் மூத்த மகன் மருத்துவர் ரோகித்துக்கும், மருத்துவர் சிறீஜா அவர்களுக்கும் கடந்த பிப்ரவரி 17-ஆம் நாள் எர்ணாகுளத்தில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.


இதனையடுத்து இன்று (பிப்ரவரி 21-ஆம் நாள்) மாலையில் புதுமணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு இடையில், கேரளா மாநில அரசியல் மோதலில் இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு உயிர் இழந்ததால், இன்று மாலையில் நடைபெற இருந்த தனது இல்லத்துத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரமேஷ் சென்னிதலா ரத்து செய்தார்.


கடந்த 25 ஆண்டுகளாக ரமேஷ் சென்னிதலா அவர்களுடன் அரசியல் எல்லை கடந்து வைகோ அவர்கள் நட்புகொண்டு பழகி வந்ததால், வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், ரமேஷ் சென்னிதலா அவர்களின் இல்லத்துக்கு வைகோ அவர்களும், அவரது துணைவியார் ரேணுகாதேவி அவர்களும் இன்று காலை ரமேஷ் சென்னிதலா இல்லத்துக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.


ரமேஷ் சென்னிதலா அவர்களும், அவரது துணைவியாரும், அவரது குடுபத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வைகோ குடும்பத்தாரை வரவேற்றனர். 


தமிழகத்தில் அரசியல் கூட்டணி குறித்து பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், திமுக நட்பு கட்சியாக இருக்கும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் கேரளா சென்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.