DMK+MDMK : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுகவுடன் தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது எனத்தகவல்.
விரைவில் 2019 மக்களவை தேர்தல் வர உள்ளதால், தமிழகத்தை பொருத்த வரை அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று திமுகவுடன் கூட்டணி குறித்து மதிமுக தொடர்ந்து பேச்சுவாரத்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவாரத்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டதல் திமுகவுடன் தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்களவை தேர்தலில் மதிமுக 2 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் போட்டியிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இன்று திமுக தலைமை மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வந்தது.
இதில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மதிமுகவுக்கு தலா இரண்டு தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சி ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொருத்த வரை மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதியிலும் திமுக சின்னத்தில் போட்டியிடும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனத்தெரிகிறது.
மக்களவை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி திமுக சின்னத்தில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.