ஆண்டிற்கு ₹5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு -tnGovt!
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைக்கும் திட்டத்தினை துவங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைக்கும் திட்டத்தினை துவங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
தமிழகத்தின் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டத்தினை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் தெரிவிக்கையில்...
"தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில், தமிழகத்தின் 7700000 குடும்பம் இடம்பெற்றுள்ளது.
தற்போது முதல்வர் மருத்துவகாப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் சிகிச்சை பெற முடியும் என்ற நிலையில், இவர்கள் அனைவருக்கும் ஆண்டிற்கு 500000 ரூபாய்க்கான தேசிய மருத்துவ காப்பீடு வழங்கப்படும், இதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்.
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுவதற்கு, பயனாளிகள் தனி தனி அடையாள அட்டை பெற தேவையில்லை. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுக்கான அடையாள அட்டையே போதுமானது
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பயனாளிகள் செல்கையில், தேவைப்பட்டால் அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார்!