ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய்குமார் (19). கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி விடுதியில் அறையில் இருந்த அஜய்குமார் திடிரென வாத்தி மயக்கம் எடுத்து கீழே விழுந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜய்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிறகு அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அஜய்குமார் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்தை எடுத்துக்கொண்டதும், அதனால் ஏற்பட்ட உயர் இரத்த அழுத்ததால் இருதய செயழிலப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. 


மேலும் படிக்க |  உள்ளாடையில் ரத்தக்கறை.. மார்பில் காயங்கள்... அதிர்ச்சி தரும் பிரேத பரிசோதனை அறிக்கை


இதை அடுத்து, மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மதுக்கரை போலீஸார் தனிப்படை அமைத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மதுக்கரை ஆய்வாளர் வைரம் தலைமையில் உதவி ஆய்வாளர் கவியரசு அடங்கிய போலீஸார் அஜய்குமார் தங்கியிருந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, சக மாணவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அஜய்குமார் ஆன்லைன் மூலம் போதைக்காக மருந்து வாங்கி அதை நரம்பு மூலம் செலுத்திய போது மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரபடுத்திய போலீஸார் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்தவர் குறித்த தகவல்களை சேகரித்தனர். 


அதில் கும்பகோணத்தில் மருந்தகம் நடத்தி வரும் முகமது பசீர் என்பவர் ஆன்லைன் மூலமாக மருத்துவரின் பரிந்துறையின்றி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆடர்களை பெற்று கொரியர் மூலமாக வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் கவியரசு தலைமையில் கும்பகோணம் சென்ற தனிப்படை போலீசார் முகமது பசீரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதையத்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா: பாமக சந்தேகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ