கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு  இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி, கோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கும், அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அர பிறப்பித்தது. இந்நிலையில், கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கோவில் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 


அதோடு, 1. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் எத்தனை கோயில்கள் உள்ளன? அந்த கோயிலுக்கு எவ்வளவு நிலங்கள் உள்ளன? அந்த நிலங்கள் பற்றிய சர்வே நம்பர் உள்ளிட்ட விவரங்கள்?   


2. கோயில் நிலங்கள் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அந்த ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் எந்த கோயிலுக்கு சொந்தமானது? மேலும் அந்த ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களின் சர்வே நம்பர் உள்ளிட்ட விவரங்கள்?  


3. அவ்வாறு ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் இதுவரை எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது? அவ்வாறு மீட்கப் மீட்கப்பட்டுள்ள நிலங்கள் பற்றிய சர்வே நம்பர் உள்ளிட்ட விவரங்கள் ?                


4.  ஆக்கிரமிப்பில் இருந்து இதுவரை மீட்கப்படாத நிலங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் ஆகிய நான்கு கேள்விகளையும் முன்வைத்து இதற்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.