Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. ஒரேநாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரேநாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, திருப்பூர், தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரேநாளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள மையங்களில் மட்டும் இரவு 8:30 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்தது.
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன் பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 100 ரூபாய்க்கான ரீசார்ஜ் கூப்பன் வழங்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கக்காசு, செல்போன் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இன்று நடைபெறுவது போல வாரந்தோறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்குவதற்கு திட்டமிட்டு உள்ளோம்” என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தலா 5 முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 700 முகாம்கள் இன்று நடக்கின்றன; 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ALSO READ | நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR