சென்னை மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி அவரது வீட்டில் பிடிப்பட்டார்...
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பிய பின்னர், காவல்துறை உதவியுடன் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பிய பின்னர், காவல்துறை உதவியுடன் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும், சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
READ | புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், காவலர்களுக்கு உணவு அளித்த நபருக்கு கொரோனா...
உத்தியோகபூர்வ வட்டாரங்களின்படி, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் யார் கண்னிலும் படாமல், புல்லியந்தோப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரது அயலவர்களால் எச்சரிக்கப்பட்ட பின்னர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டுவந்தனர். பல முயற்சிகளுக்குப் பிறகுதான் நோயாளியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மீண்டும் அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர்.
"சுகாதாரத் துறையிடம் பேசிய பிறகு, அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திங்கள்கிழமை இரவு ஒரு வாகனம் ஏற்பாடு செய்தோம். ஆனால் அவர் வரத் தயாராக இல்லை. பின்னர் அவர் வெளியேற முடியாதபடி நாங்கள் அவரது வீட்டைப் பூட்டினோம். செவ்வாய்க்கிழமை காலை , மீண்டும் ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது, காவல்துறையினர் உதவியுடன் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
READ | கொரோனா முழு அடைப்பால் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் பண்ட மாற்று முறை...
தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1937-ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகப்படியாக சென்னையில் 570 வழக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக திங்கள் அன்று பதிவான 52 வழக்குகளில் சென்னையில் மட்டும் 47 வழக்குகள் பதிவானது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் சென்னையில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது என இதன் மூலம் தெரிகிறது.