சென்னை: அண்மைக்காலமாக அம்பலமாகிவரும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. சமூக நீதி, ஆணும் பெண்ணும் சமம் என்று ஒருபுறம் மார்தட்டிக்கொண்டு, மறுபுறம் பெண்களுக்கு மன உலைச்சலை உண்டாக்கும் வேலையில் படித்த ஆசிரியர்களே ஈடுபடும் விஷயங்கள் தொடர்ந்து வெளிவருவது சமூகத்தின் மீதும், பெண்கள் மீதான வன்முறைகள் மீதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பேராசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி குற்றம் சாட்டுகிறார்!


தனக்கு ஆண் நண்பர் இருப்பதை தெரிந்துக்கொண்ட பேராசிரியர் அதை சொல்லி மிரட்டியதாக முன்னால் மாணவி சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.  



எனக்கு ஆண் நண்பர் ஒருவர் இருக்கிறார் என்பதைத் தெரிந்துக் கொண்ட பேராசிரியர் வரதராஜன், விஷயத்தை எனது பெற்றோரிடம் கூறிவிடுவதாக சொல்லி என்னை மிரட்டினார். மேலும், அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து ஆசிரியர்கள் அறைக்கு வரவழைத்தார் என்று முன்னாள் மாணவி வைக்கும் பகீர் குற்றச்சாட்டு பல கேள்விகளை எழுப்புகிறது.


Also Read | பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்


குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பேராசிரியர் வரதராஜன் தற்போது சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. சாஸ்த்ரா பல்கலைக் கழக மாணவிகளின் இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


அதுமட்டுமல்ல, இந்த மாணவி மூன்றாவது ஆண்டில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் பணிக்கு சேர்ந்திருக்கிறார். அவர், மாணவியை தேர்வுக்கூடத்தில் காக்கவைத்துள்ளார். பிற மாணவ, மாணவியர் அனைவரும் சென்ற பின்னர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும், தன்னுடைய கேள்வித்தாளில்   மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்தார் என்றும் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பல்கலைக்கழக டீனிடம் புகார் செய்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவி குறைகூறியுள்ளார். இந்த ஒரு பெண் மட்டுமல்ல, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக ஊழியர்கள் பாலியல் ரீதியாக  துன்புறுத்தியதாக முன்னாள் மாணவிகள் பலரும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Also Read | PSBB: உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசு கலைக்கப்படும்-சுப்பிரமணியம் சுவாமி அதிரடி


சில நாட்களுக்கு முன்னதாக சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


இந்த சம்பவங்களை தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த முன்னாள், தற்போதைய மாணவ-மாணவியினர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழக ஊழியர்கள் சிலர் மீது பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் சிலர்  குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர்.பாலியல் தொந்தரவு செய்த நபர்களின் பெயர்களையும், தாங்கள் எப்படி பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தப்பட்டோம் என்பதையும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் மாணவிகள் பதிவிட்டுள்ளனர்.


Also Read | Positive Angle of  Corona: லேசான கொரோனா பாதிப்பு நோயெதிர்ப்பை அதிகரிக்கும்   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR