மேவாட் கொள்ளை கும்பலின் பின்னணி : திருடுவதே முழு நேர தொழில்
Mewat Gang : நாமக்கல் மாவட்டம் வெப்படையில் மாட்டிக் கொண்ட மேவாட் கொள்ளை கும்பலின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது.
தென்னிந்தியா முழுவதும் கொள்ளைகளை அரங்கேறி வரும் மேவாட் கொள்ளை கும்பல் பற்றிய அதிர்ச்சி பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. கேராளவில் ஏடிம் கொள்ளையில் ஈடுபட்ட மேவாட் கொள்ளை கும்பல், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் மாட்டிக் கொண்டது. அவர்களை பிடிக்கும்போது பாதுகாப்புக்காக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த மேவாட் கொள்ளை கும்பலின் பூர்வீகம் எல்லாம் ஹரியானா மாநிலம். ஆனால், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் முழுநேர தொழிலே திருடுவது தான். இந்த கும்பலில் குறைந்தபட்சம் 100 பேர் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. உண்மையான எண்ணிக்கை இதுவரை வெளியில் தெரியவில்லை.
நாடு முழுவதும் பல்வேறு குழுக்களாக பிரிந்து திருடுவதே இக்கொள்ளை கும்பலின் வேலை. குறிப்பாக ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள். பணம் அதிகம் இருக்கும் ஏடிஎம்களை நோட்டமிட்டு திருடிவிடுவார்கள். சரக்கு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டடு ஒரு கும்பல், தனியாக ஒரு காரில் ஒரு கும்பல், விமானத்தில் ஒரு கும்பல் என ஒரு கொள்ளைக்கு மூன்று குழுக்களாக தனித்தனியாக சென்று சேருவது இவர்களது வழக்கம். கொள்ளை அரங்கேற்றிய பிறகு காரை சரக்கு லாரியில் ஏற்றிக் கொண்டு வேறு பகுதிக்கு கிளம்பிவிடுவார்கள். இவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய காருக்கு பதிவெண் எல்லாம் இருக்காது. அப்படியே பதிவெண் நம்பர் பிளேட் இருந்தாலும் அடிக்கடி அதனை மாற்றிவிடுவார்கள்.
அதனால் இவர்களை காரை வைத்து பிடிப்பது எல்லாம் இயலாத காரியம். இவர்கள் வசிக்கும் மேவாட் பகுதி மட்டும் அல்ல, அண்டை கிராமங்களுமே திருட்டு பெயர் போன இடங்கள். குறிப்பாக வாகன திருட்டு. டெல்லி, ராஜஸ்தான், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் திருடபடும் வாகனங்கள் எல்லாம் இரண்டு நாட்களில் அடையாளம் தெரியாதளவுக்கு மாற்றிவிடுவார்கள். அதற்கு ஏற்ப டாக்குமென்டுகளையும் ரெடி செய்துவிடுவார்கள். மேவாட், லுகிகாகலான், ஜமால் கார்க், தேவ்லா நங்கிலி, சோர்ஹார்கி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திருட்டு வாகனங்களுக்கு என ஏலமே நடைபெறும். ஏலத்தில் போகாத வாகனங்கள் சில நமிடங்களில் பிரித்து மேயப்பட்டு ஸ்பேர் கடைகளுக்கு பொருட்களாக அனுப்பி வைக்கப்படும். இந்த பகுதிகளில் மார்க்கெட்டில் கிடைக்காத ஸ்பேர்கள் கூட மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
இப்போது நாமக்கல் மாவட்டம், வெப்படையில் சிக்கியவர்களின் பின்னணியும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தான். இந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள் 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் கொள்ளையடிக்க சென்றபோது மாடு திருட வந்ததாக மாட்டிக் கொண்டனர். அப்போது அவர்கள் முகவரியை மாற்றி கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் புகைப்படம் கைரேகை பதிவாகியுள்ளது. இது தவிர ஆந்திர மாநிலம் கடப்பாவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இதே கும்பல் atm மெஷின் கொள்ளை அடித்து பணத்தை திருடி உள்ளது. அது மட்டும் இல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டம் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். கொள்ளையில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறும்போது, "இவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்கள் குழு 60 பேர் 70 பேர் கொண்ட கும்பலாக இருக்கிறது. திருடுவதற்கு கைதேர்ந்த ஆறு ஏழு பேரை தேர்வு செய்து மற்றும் ஏடிஎம் மெஷின் வெல்டிங் செய்ய ஒரு நபரும், ஓட்டுநர் ஒரு நபரும் இணைந்து குழுவாக ஏற்கனவே தேர்வு செய்த பகுதிக்கு சென்று கொள்ளையடிப்பதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்" என கூறினார்.
தற்போது, நாமக்கல்லில் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்கள் இருப்பிடம், வங்கி, இருப்பு ஆகியவற்றை தனிப்படை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது. இவர்களை பற்றி விசாரிப்பதற்காகவே அமைக்கப்பட்ட நான்கு குழுவில், ஒரு குழுவினர் இவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கு செல்கிறது?, யாருக்காவது கொடுக்கிறார்களா? அல்லது சொத்து வாங்கி சேர்த்தார்களா?, வேறு காரணத்துக்கு செலவிடப்படுகிறதா? என்பது குறித்தும் தனிப்படை விசாரிக்கிறது.
மேலும் படிக்க | Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ