எம்ஜிஆர், ஜெயலலிதா இரட்டை விளக்கு: ஓபிஎஸ்
இரட்டை விளக்கில் எம்ஜிஆர் ஒன்று மற்றொரு ஜெயலலிதா என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் மதுசூதனனுக்கு வெற்றியை பெற்றுத் தருவர் என்று ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்கேநகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணியாக போட்டி இடுகின்றனர்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அதிமுகவின் இரு அணிகளும் சின்னத்தை பிரபலப்படுத்த போராடி வருகின்றனர். இந்நிலையில் தண்டையார்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகத்தை ஓ.பன்னீர் செல்வம் இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர்:-
அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் மாபெரும் வெற்றியை பெறுவார். ஆர்கேநகரில் பிரசாரத்துக்கு மதுசூதனன் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் அமோக ஆதரவு தருகின்றனர். அதை வரும் ஏப்ரல் 12-ம் தேதி இரட்டை விளக்கு மின்கம்பத்துக்கு வாக்களிப்பதன் மூலம் உறுதி செய்வர். எங்களது இரட்டை விளக்கு சின்னத்தில் ஒரு விளக்கு எம்ஜிஆர், மற்றொரு விளக்கு ஜெயலலிதா. இதை பிரகடனப்படுத்தி நாங்கள் வாக்கு சேகரிப்போம். இந்த இரு விளக்குகளும் ஒளிவிளக்காக இருந்து மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவார் என்றார் அவர்.