எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம் - தீபா
வரும் 17-ம் தேதி முதல் தனது அரசியல் பயணம் தொடரும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் தினசரி மாலையில் சிறிது நேரம் தீபா பேசி வருகிறார்.
தீபா கூறியதாவது:-
புரட்சி தலைவர் எம்ஜிஆர் -ன் நூற்றாண்டை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக மக்களுக்காக நல்ல பாதையை மேற்கொள்வோம். உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன். சிறிது காலம் பொறுமை காத்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். மக்களுக்கான பணியை தொடர காத்திருக்கிறேன். உங்களுக்காக நான் பணியாற்றுவேன். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டான வரும் 17-ம் தேதி முதல் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கும். என கூறினார்.