வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுசெயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, " மோடியை எனக்கு குஜராத் முதல்வராக இருக்கும்போதிலிருந்தே பழக்கம். காரணம் பெரும்பாலான முதலமைச்சர் கூட்டங்களுக்கு கருணாநிதி செல்லமாட்டார். என்னை அனுப்புவார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த பிறகு நானும்,  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் மோடியை சந்திக்க முதல் முறை டெல்லிக்கு சென்றோம். பாசத்துடன் மோடி தலைவரை வரவேற்றார். தளபதிக்கு வரவேற்பு கொடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Manipur Video: அரசு ஒன்றும் செய்யவில்லை... மனவேதனையை பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்!


கடைசியாக நான் மோடியை பார்த்து உங்களோடு நான் ஒரு வார்த்தை பேசலாமா என்றேன்.  அப்போது நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உங்களுக்கு கைகொடுக்கிறோம் என்று சொன்னேன். அவர்கள் என்னை பாராட்டினார். அப்படிபட்ட பிரதமர் மோடி ஏர்போர்ட் வந்தார். அப்போதும் அவரை நான் வரவேற்றேன். அந்த பெருமையை எனக்கு அளித்தது காட்பாடி தொகுதி. காட்பாடியில் பல முறை போட்டியிட்டவன். பலபேர் என்னை தோற்கடித்த படை எடுத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை" என பேசினார்.


அவரின் இந்த பேச்சு திமுக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்தை ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு திமுக கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. பிரதமர் மோடியையும், பாஜகவையும் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போதுகூட மத்திய பாஜகவின் இந்த மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன் திடீரென பிரதமர் மோடியை புகழ்ந்து பேசயிருப்பது என்ன மாதிரியான அணுகுமுறை என அக்கட்சியினரே கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ