நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது, மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறும்போது..!
 
காலா படம் பற்றிய கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார், நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார். உலகின் முதல் உயிரினம் கடலில் தான் தோன்றியது; கடல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 


தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர், இன்று உலக பொம்மைகள் தினம். இந்த நாளில் நீயும் பொம்மை, நானும் பொம்மை நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை" என்று, கவிஞர் பாடியுள்ள வரிகள் நினைவிற்கு வருகின்றது. ஆகையால் வெறும் பொம்மைகளாக இல்லாமல், சமூகத்தின் படைப்பாளிகளாக இருக்க வேண்டும் என்பதை வாழ்த்தாக கூறிக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.