வரி ஏய்ப்புக்காக நடைபெறும் சோதனையை முட்டை கொள்முதலில் ஊழல் என திசை திருப்ப கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெரீனா கடற்கரையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்ததை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டுவதை மத்திய இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 


அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளை கூறினால், பதிலடி கொடுக்க தாங்களும் இருப்பதாக அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.


மேலும் அவர் பேசுகையில், "முட்டை கொள்முதலில் ஊழல் உள்ளதாக கூறுவதில் சிறிதளவு கூட உண்மையில்லை. வரி ஏய்ப்புக்காக நடைபெறும் சோதனையை முட்டை கொள்முதலில் ஊழல் எனக் கூறி திசை திருப்ப கூடாது. மேலும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை நிலையை ஆணையம் விசாரணை செய்து அறிவிக்கும். மேட்டூர் அணை நீர்திறப்பு குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும். தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் கலப்படம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.