சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் OMR சாலையில் வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை பெருங்குடி, சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் நீர் மோர் பந்தலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சோழிங்கநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்பொழுது அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உடல் உறுப்பு தானம் செய்வர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற அறிவித்தார். அதை தற்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள்” என மா.சுப்பிரமணியன் புகழாரம் முதல்வருக்கு புகழாரம் சூட்டினார். 


மூளைச்சாவு அடைந்தவர்கள் கடந்த ஆண்டு 178 பேர் 1000 உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 1000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகம் மேற்கொண்டதற்கு தமிழகத்திற்கு சிறந்த மாநிலமாக பட்டம் வழங்கினர். 


மேலும் படிக்க | எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை... நீலகிரி இ-பாஸ் குறித்த முக்கிய அப்டேட்...!



கடந்த 2022ம் ஆண்டு 156 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.  கடந்த 2023ம் ஆண்டு 178 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இந்தாண்டு 130 நாட்களில் 102 உடல் உறுப்பு தானம் நடைபெற்றுள்ளது. 


கடந்த 6, 7 ஆண்டுகளில் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் கொண்டார். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ஒரு மனிதநேயமிக்க பாராட்டும் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


நாய்கடிக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான வசதி உள்ளது. தேர்தல் விதிமுறைகள் உள்ளதால் நாங்கள்தான் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சோழிங்கநல்லூரில் பேட்டியளித்தார்.


மேலும் படிக்க | Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ