உதயநிதியை விமர்சித்த சி.வி. சண்முகம்... வெச்சு செஞ்ச பொன்முடி
உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு சட்டப்பேரவைகு தொகுதிக்குள்பட்ட, செங்கல்பட்டு நகர் பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய பொன்முடி, “இளைஞர் அணி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளார் அந்த உணர்வுதான் அனைவருக்கும் இருக்க வேண்டும். நம்முடைய அன்பிற்குரிய உதயநிதி அமைச்சராக வந்த பிறகு கடந்த இரண்டு நாள்களாக அனைவரும் உதயநிதி உதயநிதி உதயநிதி என பேசுகிறார்கள்.
என்னுடைய மாவட்டத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் இருக்கிறான். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குடும்பத்தில் இருந்து யாராவது வந்திருக்கிறார்களா என பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் சிவி சண்முகத்திற்கு வரலாறு தெரியவில்லை, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உயிரிழந்தவுடன் அவருடைய துணைவியார் ஜானகி முதலமைச்சராக பதவி வகித்தார்.
ஜானகி முதல்வராக இருந்தபொழுது நான்தான் உண்மையான வாரிசு என ஜெயலலிதா கூறினார். அது எப்படி என்பது உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். சி.வி.சண்முகமே உங்கள் அப்பா முன்னாள் எம்.பி. அதன் அடிப்படையிலேயே உனக்கு கட்சியில் இடமும் சீட்டும் கிடைத்தது. உனக்கு வாரிசு அரசியல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
மேலும் படிக்க | சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக இந்திய ரிசர்வ் பட்டாலியன் வரவழைக்கப்பட்டது
சசிகலா ஜெயலலிதாவிற்கு உதவியாளராக இருந்தார் அவரையே தலைவராக்கிக்கொள்ளும் நிலையில் அதிமுகவினர் இருந்தனர். ஆனால் வாரிசுகளாக இருந்தாலும் கட்சியைப் பணிகளில் ஆரம்பம் முதலே ஈடுபட்டால்தான் திராவிட கொள்கை உணர்வு இருக்கும். அப்படி சிறு வயது முதலே பணியாற்றியவர் தான் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்கள் மீது நிறைய அக்கறை உள்ளது. அவருக்கு எல்லா விளையாட்டுகளும் தெரியும். எனவேதான் அந்த துறைக்கு அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.
மேலும் படிக்க | மத்திய அரசு இணையதளத்தில் மலிவான விலையில் லேப்டாப்! பிளிப்கார்ட், அமேசான் வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata