எளிமையான வாழ்க்கை வாழ்பவர் முதல்வர் EPS - ராஜேந்திர பாலாஜி!
மக்கள் நீதி மய்யம் கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்!
மக்கள் நீதி மய்யம் கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்!
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் இன்ற நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது...
"கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. இக்கட்சி வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் ஆபத்து" என தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் தனக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேலையில் ரஜினி ஆன்மீகத்தை சார்ந்த நல்ல மனிதர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்., கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கின்றார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. அவரால் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற இயலாது, தேர்தல் வந்தால் அதிமுக-வும், திமுக-வுதான் நிற்கும். மற்ற கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிடும். தனக்கு வந்த சிறிய பிரச்சனைகளை கூட சமாளிக்க முடியாமல் வெளிநாட்டுக்கு செல்வேன் என்று கூறியவர் தான் கமல், அவரால் எப்படி மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
வரவிறுக்கும் திருவாரூர், திருப்பரங்குன்ற இடைத்தேர்தல் குறித்த செய்தியாளர்கள் கேட்டதற்கு., இவ்விரண்டு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் அதிமுக-வின் இரும்புக்கோட்டை என தெரிவித்துள்ளார்.
தனது துறை குறித்து பேசிய அவர்... பால்வளத்தில் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி நடந்துள்ளது. கொள்முதல் விற்பனையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம் என தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் கூறி விட்டால் அதிமுக-வை அழித்து விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது, அவர் பதவி விலக வேண்டியது இல்லை. மக்களின் கஷ்டங்களை அறிந்த முதல்வராக அவர் எளிமையான வாழ்க்கையினை வசித்து வருகின்றார்.
சபரிமலை விவகாரத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் யாரும் தலையிடக்கூடாது. காலம், காலமாக உள்ள நடைமுறையை மாற்றுவதால் தான் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்