மதுரை: HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்னுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி, ₹2 லட்சம் பணம் அளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த அவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, ரத்தம் ஏற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. பின்னர் அருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் HIV தொற்று இருப்பதாக தெரியவந்தது.


இதனையடுத்து HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 9 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், மேலும் தனது சொந்த பணத்தில் ₹2 லட்சம் உதவியாக அளித்துச் சென்றார்.


இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சாத்தூர் படந்தாலில் அரசு நிலம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக விருதுநகர் கலெக்டரிடம் பேசி அவர் கேட்ட பகுதியிலேயே இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பெண்னுக்கு தகுத் வேலை வழங்கப்படும் எனவும், அவரது கணவருக்கு கணவருக்கு ஓட்டுநர் வேலை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.