2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். ஆனால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெறுவதற்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பலமுறை மனு தாக்கல் செய்தபோதும், அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டு தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே வைக்கப்பட்டார். அண்மையில்கூட 19வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சபாநாயகர் அப்படி பேசியிருக்கக்கூடாது, அவரால் தான் வெளியேறினேன் - ஆளுநர்


சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அதற்கு காரணம் ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் அவரை அமைச்சரவை பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் முதலமைச்சரின் அதிகாரத்துக்குட்பட்ட விஷயம் என்பதால் இதில் ஆளுநர் தலையிட உரிமையில்லை எனக் கூறி, செந்தில் பாலாஜியை தொடர்ந்து இலாக்க இல்லாத அமைச்சராக தொடர வைத்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கூட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


உச்சநீதிமன்றம் கூட செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் எந்த தார்மீகமும் மீறப்படவில்லை என தெரிவித்தது. இதனால் அவரை இலாக்கா இல்லாத அமைச்சராகவே தொடர வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சூழலில் தான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார் செந்தில் பாலாஜி. அடுத்தவாரத்தில் ஜாமீன் மனு வர இருப்பதால் மீண்டும் அமைச்சர் பொறுப்பை காரணம் காட்டி அமலாக்கத்துறை முட்டுக்கட்டை போடும் என்பதால் இந்த முடிவை செந்தில் பாலாஜி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 


அதேநேரத்தில், இன்னொரு வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறதாம். இதனையறிந்த திமுக, அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. அவரைத் தொடர்ந்து திமுக மூத்த அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தவும் டெல்லி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்நாட்டில் அதிரடி ரெய்டுகள் இருக்கும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! அதிக தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ